தொழிலதிபர் ரத்தினத்தின் இரண்டாவது மகன் வெங்கடேஷ் திமுக-வில் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். தொழிலதிபர் ரத்தினம் ரியல் எஸ்டேட், கட்டுமானம், கல்வி நிறுவனங்கள், மணல் குவாரி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் மணல் குவாரி நடத்துவதில், சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 12 , 13 ஆகிய இரண்டு தேதிகளில் தொழிலதிபர் ரத்தினம் மற்றும் அவரது மைத்துனர் கோவிந்தன் ஆகியோர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.இந்த நிலையில் இன்று ஜி.டி.என். சாலையில் உள்ள ரத்தினம் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 10 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
NEWS EDITOR : RP