மீஞ்சூர் பேரூராட்சி அரியன்வாயல் கிராமத்தில் 1,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஜெகன் நகரில் மீஞ்சூர் பேரூராட்சி சார்பில் வளம் மீட்பு பூங்கா அமைக்கப்பட்டது. இந்தப் பூங்காவில் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டும் பணியினை தொடங்கினர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பொதுமக்கள், குடியிருப்பு சங்கத்தினர், அரசியல் கட்சியினர் வளம் மீட்பு பூங்காவில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைவரும் ஒன்று சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு பதிலாக வேறு இடத்தில் கொட்ட வேண்டும் எனவும் இப்பகுதியில் சுகாதார சீர்கேட்டால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படும் என தெரிவித்தனர். இதனால் அரியன்வாயல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
NEWS EDITOR : RP