டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் 2-வது தளத்தில் அமைந்துள்ள எண்டோஸ்கோபி பிரிவு அறையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தை அடுத்து அந்த தளத்தில் இருந்த நோயாளிகள் அவசர அவசரமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். கொழுந்து விட்டு தீ எரிந்ததால் கட்டிடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 8 வாகனங்களில் விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.விரைவில் மருத்துவ சேவைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என டெல்லி பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
இந்த தீ விபத்து குறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர்,”தீ விபத்தினால் 31 நோயாளிகள் ‘ஏபி-2’ பிரிவிலிருந்து ‘ஐசியூ’ மற்றும் ‘ஏபி-7’ பிரிவிற்கு மாற்றப்பட்டு உள்ளனர். மேலும் அவசர சிகிச்சை பிரிவிலிருந்து 70 நோயாளிகள் மற்ற பிரிவுகளுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதமோ யாருக்கும் எந்த வித காயமோ ஏற்படவில்லை.
NEWS EDITOR : RP