நடிகர் சந்தானத்தின் ரசிகர்கள் அவரின் புதிய படத்தின் அப்டேட் குறித்து எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். 2016 மற்றும் 2019 இல் தில்லுக்கு துட்டு மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகிய இரண்டு படங்கள் மக்களிடம் வரவேற்பை பெற்றன. அந்த வரிசையில் சந்தானம் கதாநாயகனாக நடித்து கடந்த ஜூலை 28-ம் தேதி வெளியான படம் தான் ‘டிடி ரிட்டன்ஸ்’. இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது மற்றும் வசூலிலும் திருப்திகரமாக இருந்தது.
பிரேம் ஆனந்த் இயக்கிய இப்படத்தில் சுரபி, காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மாசூம் சங்கர், ஃபெசி விஜயன், மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், தீனா, பிபின், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபக் குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்துள்ளார்.இந்நிலையில் டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் நடிகர் மொட்டை ராஜேந்திரன் நடித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
டிடி ரிட்டர்ன்ஸ் படம் கிட்டதட்ட ரூ.30 கோடி வரை வசூல் செய்ததாக தகவல் வெளியானது. ஆனால் ரஜினி நடித்த ஜெயிலர் படம் வெளியான நிலையில் திரைக்கு வந்த 2 வாரங்களிலேயே டிடி ரிட்டர்ன்ஸ் படம் தியேட்டர்களில் நீக்கப்பட்டது. ஆனால் மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால் மீண்டும் தியேட்டர்களில் டிடி ரிட்டர்ன்ஸ் படம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
NEWS EDITOR : RP