இந்தியாவில் சமீப காலமாக உணவுப் பொருட்களில் கரப்பான் பூச்சி, எலி, பல்லி, பூரான் போன்றவைகள் கிடப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் மீண்டும் அப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நிகோல் என்ற பகுதியில் பிரபல உணவகம் ஒன்று அமைந்துள்ளது.அந்த உணவகத்திற்கு அவினாஷ் என்பவர் தன் மனைவியுடன் சாப்பிட சென்றதை அடுத்து அவர்கள் தோசை ஆர்டர் செய்துள்ளனர். அப்போது கொண்டு வந்த சாம்பாரில் ஏதோ மிதந்தது போல் தெரிந்ததால் அவினாஷ் அதை கவனித்து பார்த்தார். அப்போது சாம்பாரில் எலி ஒன்று செத்து கிடந்தது தெரியவந்தது.
Please follow and like us: