அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுகள் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 17ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது எனவும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் 21-ம் தேதி அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளி சுழற்சியின் காரணமாக லட்சத்தீவு பகுதி தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய பகுதியில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.21-ம் தேதியில் மத்திய அரபிக் கடல் பகுதியில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம், மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
NEWS EDITOR : RP