கோவை குறிச்சி பிரிவு பகுதியில் போத்தனூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் ஒரு ஆணும், பெண்ணும் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டு இருந்தனர். உடனே அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் குனியமுத்தூரை சேர்ந்த அசாருதீன் (வயது 30), அவருடைய மனைவி ஷபீனா (30) என்பதும், அவர்கள் கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது. உடனே அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சா, மோட்டார் சைக்கிள், தராசு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
NEWS EDITOR : RP
Please follow and like us: