பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார். முன்னதாக ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக, திராவிடர் கழகம், விசிக உள்ளிட்ட கட்சியினர் கல்லூரி அருகே கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே பட்டமளிப்பு விழாவில் இருந்து சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் மற்றும் மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம் ஆகியோர் வெளிநடப்பு செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது. விழாவில் ஆளுநருக்கு பொன்னாடை போர்த்த அனுமதி அளிக்காததால் அவர்கள் இருவரும் வெளிநடப்பு செய்ததாக கூறப்படுகிறது.
NEWS EDITOR : RP
Please follow and like us: