புதுடெல்லி, இந்த ஆண்டு மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலும், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெறவுள்ளது.
இதற்கான ஆயத்த பணிகளை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடங்கியுள்ளார். இதற்காக பல்வேறு மாநிலங்களில், கட்சியின் மாநிலத் தலைவர்களை மாற்ற காங்கிரஸ் கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், விரைவில், தமிழ்நாடு, டெல்லி, மேற்குவங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு புதிய மாநில தலைவர்கள் நியமிக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை 5 ஆண்டுகளாக பதவியில் இருக்கும் கே.எஸ்.அழகிரியை மாற்றி விட்டு புதிய தலைவரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கார்த்தி சிதம்பரம், திருநாவுக்கரசர், செல்வப்பெருந்தகை, தங்கபாலு ஆகியோரின் பெயர்கள் அந்த பட்டியலில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
NEWS EDITOR : RP