“கிறிஸ்தவ ஆண் காதலன் தேவை” : நியூயார்க் பெண்ணின் கிரெய்க்ஸ்லிஸ்ட் பட்டியல் ட்விட்டரில் வைரல்..!!

Spread the love

டேட்டிங் என்பது இன்றைய காலகட்டத்தில் கலாச்சார பேதமின்றி சாதாரணமான ஒரு நிகழ்வாக மாறி வருகிறது. ஆங்கிலத்தில் டேட்டிங் என்ற வார்த்தைக்கு பொருள், தமிழில் பொருத்தம் பார்த்தல் என்று அர்த்தம். பொதுவாக டேட்டிங் என்பது குறிப்பிட்ட தேதி மற்றும் பொது இடத்தில் ஒருவர் தனக்கு ஏற்ற துணையை தானே பொருத்தம் பார்த்து தேர்வு செய்வதற்கான ஒரு விருப்பமாக இருக்கிறது. இருப்பினும் டேட்டிங்கிற்கான வரைமுறை பல்வேறு நாடுகளுக்கு இடையே சிற்சில வேறுபாடுகளையும் கொண்டுள்ளது.

அந்த வகையில் இங்கு நியூயார்க்கை சேர்ந்த திருமணமாகி விவாகரத்து பெற்ற பெண் ஒருவர், கிரெய்க்ஸ்லிஸ்ட் என்ற அமெரிக்க நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் பக்கத்தில் “கிறிஸ்தவ ஆண் காதலன் தேவை” என்ற பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கிரெய்க்ஸ்லிஸ்ட் என்பது வேலைகள், வீடுகள் போன்றவற்றுக்கான பிரிவுகளைக் கொண்ட ஒரு வகைப்படுத்தப்பட்ட விளம்பர இணையதளமாகும்.

இந்த இணையதள பக்கத்தில், அவர் வெள்ளியிட்டுள்ள அந்த பதிவில், ஹூஸ்டனின் புறநகர்ப் பகுதியான TX, Angleton இல் எனக்கு ஒரு அழகான, விசாலமான 5-படுக்கையறை செங்கல் மற்றும் மர வீடு உள்ளது. என்னுடன் வாழ்வதற்கு ஒரு கிறிஸ்தவ ஆண் காதலன் அல்லது roommate அதாவது அறைத்தோழன் வேண்டும். முதல் 60 நாட்கள் இலவசம். குற்றப் பின்னணி எதுவும் இருக்கக் கூடாது. பூனைகளை நேசிக்க வேண்டும்.

நான் ஒரு தடகள வீரர் என்பதால் பார்ப்பதற்கு மிகவும் மோசமாகத் தோன்றவில்லை. என் எடையில் சில ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஆனால் நல்ல நிறமாக இருப்பேன். எனக்கு ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து பெற்றவள். எனக்கு 13 மற்றும் 15 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் இருவரும் அவரது தந்தையுடன் உள்ளனர். தற்போது நான் தனிமையில் இருக்கிறேன். விவாகரத்திற்கு பிறகு யாரையும் சந்திக்க வில்லை. மேலும், எனது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இத்தாலிய, இஸ்ரேலிய அல்லது யூத இரத்தம் உள்ளவர்களிடம் நான் எவ்வளவு ஈர்க்கப்பட்டேன் என்பதை நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன். அதனால்தான் நான் கிறிஸ்த்தவ ஆண் நண்பரோ அல்லது காதலரோ தேவை என நினைக்கிறேன்.

நீங்கள் என்னைக் காதலித்து ஒரு நாள் என்னை திருமணம் செய்துகொண்டால், நியூயார்க்கிற்குத் திரும்ப விரும்பினால், நீங்கள் நான்கு வருடங்கள் அல்லது அதற்கு மேல் காத்திருக்க வேண்டும். 60 நாள் இலவச சோதனைக்குப் பிறகு நீங்கள் செலுத்த வேண்டிய வாடகை எவ்வளவு என்பது, நீங்கள் எத்தனை பேரைக் கொண்டு வருகிறீர்கள் மற்றும் நீங்கள் எவ்வளவு கோருகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. 550 முதல் 1250 வரை செலுத்த வேண்டி இருக்கும். இங்கு வரும் எந்தவொரு அறை தோழனும் கடுமையான குற்றப் பின்னணியைக் கொண்டிருக்கக்கூடாது அல்லது சட்டவிரோத போதைப்பொருள் அல்லது மனநோய் மருந்துகளைச் செய்யக்கூடாது என்றும் அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram