சீனாவைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர், தன் வேலையினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக மிகவும் அவதிப்பட்டுள்ளார். அவரை சரி செய்வதற்காக அவரின் பெற்றோர் அந்த வேலையை விட்டுவிட்டு தங்களின் முழு நேர மகளாக இருந்தால் மாதம் 4,000 யென் (இந்திய மதிப்பில் 49,000) தருவதாகக் கூறியுள்ளனர். அந்தப் பெண்ணும் தன் வேலையை விட்டு விட்டு பெற்றோர்களுக்கு உதவி செய்வது, அவர்களுடன் நேரம் செலவிடுவது என மன அழுத்தம் இல்லாத முழுநேர மகளாக இருந்து வருகிறார். சமீபத்தில் இது தொடர்பாக பதிவு இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், தற்போது சீனப் பெண் ஒருவர் வேலை தொடர்பான மன அழுத்தத்தால் ஒரே ஆண்டில் 20 கிலோ எடை அதிகரித்ததாகக் கூறினார். தெற்கு சீனாவில் உள்ள குவாங்டாங் பகுதியைச் சேர்ந்த ஓயாங் வென்ஜிங்(24) தனது சமூக வலைதள பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ளார்.