தைவானின் கின்மென், மாட்சு மற்றும் டோங்கி தீவுகளை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா 2-வது நாளாக போர் பயிற்சி..!!

Spread the love

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது.  ஆனால் தைவானை இன்னும் தங்களது நாட்டின் ஒரு அங்கமாகமே சீனா கருதுகிறது.  எனவே தைவானை மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொள்ள சீனா முயற்சிப்பதாக கூறப்படுகிறது.  இதனால் தைவான் எல்லையில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி,  சீனா அவ்வப்போது போர்ப்பதற்றத்தை ஏற்படுத்துகிறது.இந்த நிலையில்,  தைவானில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் சுதந்திரத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட ஜனநாயக முன்னேற்ற கட்சியின் லாய் சிங்-டே வெற்றி பெற்று,  கடந்த திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.  அப்போது பேசிய அவா்,  “தைவானை மிரட்டுவதை சீனா நிறுத்தக்கொள்ள வேண்டும்.  தற்போதுள்ள எல்லை நிலையே தொடர வேண்டும்.  இந்த அரசு இறையாண்மை, ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவற்றைப் பேணும்” என்று உறுதியளித்தாா். சீனாவுடன் பேச்சு வார்த்தை நடத்த பலமுறை முன்வந்த போதிலும், சீனா மறுத்துவிட்ட நிலையில் தைவானின் எதிர்காலம் அதன் மக்களால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும் என்று லாய் வலியுறுத்தினார்.  இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த சீனா, லாய்வை “பிரிவினைவாதி” என்று கூறி, அவரது தொடக்க உரையை விமர்சித்தது.

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram