தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தைப் பார்த்துவிட்டு படத்தின் இயக்குநர் நெல்சனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜெயிலர் படத்தை பார்த்து வாழ்த்தியதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு மிக்க நன்றி. உங்களின் ஊக்கமும், பாராட்டுகளுக்கும் நன்றி. நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் உங்கள் வார்த்தைகளால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்” என பதிவிட்டுள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பான் இந்தியா முறையில் உருவாகிய இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் நேற்று (ஆகஸ்ட் 10) திரையரங்குகளில் வெளியானது.
NEWS EDITOR : RP