மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து, உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை, அமலாக்கத்துறையினர் சோதனைக்கு பிறகு இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் தற்போது நெஞ்சுவலி காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில்பாலாஜுக்கு ஆஞ்சியோகிராம் செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தல் எனத்தகவல் வெளியாகி உள்ளது. இசிஜியில் மாறுபாடு இருந்தால் இதய ரத்த நாளத்தில் அடைப்பு இருக்கிறதா என சோதிக்க முடிவு என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில், ஒமந்தூரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறினார். முதல்-அமைச்சருடன் அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோரும் அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்தித்தனர்.
NEWS EDITOR : RP