தெலங்கானாவில் வேட்புமனு தாக்கல் நவம்பர் 3ம் தேதி தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 30 தொடங்க உள்ளது. தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், வனபர்த்தி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பேசினார். அப்போது அவர், ”விவசாயிகளின் நலனில் பாஜகவை போலவே காங்கிரஸ்க்கும் எந்த அக்கறையும் இல்லை” என விமர்சித்தார்.
மேலும், ” தலித் மற்றும் இஸ்லாமிய மக்களின் நலனுக்காக மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க அரசு எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை ”எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சுதந்திரத்திற்கு பிறகு பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு தலித் மற்றும் இஸ்லாமிய மக்களின் நலனுக்காக எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. ஆனால், காங்கிரஸ் அரசு இவர்களுக்கு குரல் கொடுப்பதாக மட்டும் சொல்லிக்கொள்கிறது என குற்றம் சாட்டினார்.
NEWS EDITOR : RP