சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 32 வயது பெண் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது 9 வயது மகள் தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக சோர்வாகவும் பதற்றமாகவும் இருந்ததால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.விசாரணையில் சிறுமியிடம் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து வேன் டிரைவர் ரமேசை (வயது 48) போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து மகளிடம் கேட்டபோது வேனில் அழைத்து செல்லும் டிரைவர் ‘பேட் டச்’ செய்ததாக கூறினார். இதுகுறித்து சிறுமியின் தாய் போலீசில் புகார் கொடுத்தார். இதனையடுத்து வில்லிவாக்கம் குழந்தைகள் நல அதிகாரி ஜோஸ்பின் மற்றும் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.
NEWS EDITOR : RP