மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்க கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, கடந்த 12 மணி நேரத்தில் வடகிழக்கு நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மத்திய வங்கக் கடலில் வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கேபுபரா (வங்களதேசம்) க்கு சுமார் 800 கிமீ தொலைவிலும், தென்- தென்மேற்கு மற்றும் கேனிங்கிற்கு (மேற்கு வங்கம்) தெற்கே 810 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காலை மத்திய கிழக்கு வங்கக் கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதைத் தொடர்ந்து, அது வடக்கு நோக்கி நகர்ந்து, நாளை மாலைக்குள் தீவிரப் புயலாக வலுவடையும்.
Please follow and like us: