மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் கலவரம் நீடித்து வருகிறது. பழங்குடி அந்தஸ்து வழங்கக் கோரி மைதேயி சமூகத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு கூகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே இரு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பான வீடியோ வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இந்த சம்பவத்தில் கால நிர்ணயம் செய்து குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வந்தது.
இந்நிலையில், ஒரு சிறுவன், 6 பேருக்கு எதிராக சிபிஐ சார்பில் அசாம் மாநிலம் கவுஹாத்தி நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
NEWS EDITOR : RP