நடுவானில் விமான பணிப்பெண்ணை ஆபாசமாக புகைப்படம் எடுத்த பயணி..!!

தலைநகர் டெல்லியில் இருந்து கடந்த 2ம் தேதி மும்பை நோக்கி ஸ்பைஸ் ஜெட் விமானம் புறப்படது. விமானம் நடு வானில் சென்றுகொண்டிருந்தபோது விமானத்தில் இருந்த பயணி தன் அருகில் இருந்த பெண் பயணி மற்றும் விமான பணிப்பெண்களை செல்போனில் ஆபாசமாக புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் விமானம் மும்பை சென்ற உடன் அந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் செய்த செயலுக்கு அந்த பயணி மன்னிப்புக்கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து அந்த பயணி மன்னிப்புக்கடிதம் கொடுத்துள்ளார். இந்த…

மேலும் படிக்க

“கச்சத்தீவு விவகாரத்தில் துரோகம் செய்தது அதிமுக தான்..!!” ~ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து நடத்தும் மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. கச்சத்தீவு என்பது இலங்கை அரசுக்கு உட்பட்ட தீவாக எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. டச்சு, போர்த்துகீசிய மன்னர் காலத்து வரைபடங்கள் கூட அப்படித்தான் சொல்கின்றன. 1954-இல் இலங்கை என்று வெளியிட்ட வரைபடத்திலும் கச்சத்தீவு அவர்களுடையது என்று சொல்லப்படவில்லை. கச்சத்தீவுக்கு செல்லும்…

மேலும் படிக்க

நான் நடிகனாக துணை நின்றது என் தந்தை தான்..!!

அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’. இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் துல்கர் சல்மானின் வேஃபேரர் ஃபிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இதில் ஐஸ்வர்யா லட்சுமி, ஷபீர், செம்பன் வினோத், சாந்தி கிருஷ்ணா, அனிகா சுரேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசை அமைத்துள்ள இப்படத்திற்கு நிமீஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். இதுவரை சாஃப்ட்டான கேரக்டரில், ரொமான்ஸ் ஹீரோவாக பார்த்து ரசித்த…

மேலும் படிக்க

பாகிஸ்தான் அமைச்சரவையில் யாசின் மாலிக் மனைவி..!!

பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமர் அன்வார்-உல்-ஹக் கக்கர் தனது அமைச்சரவையில் சிறையில் உள்ள பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்கின் மனைவி முஷால் ஹுசைன் முல்லிக்கைச் சேர்த்துக் கொண்டார். பாகிஸ்தானின் மனித உரிமைகள் அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.காஷ்மீர் பிரிவினைவாதியான யாசின் மாலிக் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று டெல்லி திகார் சிறையில் உள்ளார். மெகபூபா முப்தியின் சகோதரி, மறைந்த முப்தி முகமது சயீதின் மகள் ருபையா சயீதை கடத்தியது உள்ளிட்ட பல வழக்குகள் அவர்…

மேலும் படிக்க

மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.8,000 ஆக உயர்வு..!!

 “இதுவரை 5 ஆயிரம் ரூபாயாக இருந்த மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை இனி 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 10 முக்கிய அறிவிப்புகளை மீனவர் நல மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து நடத்தும் மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

மேலும் படிக்க

பழநி மலைக் கோயில் ரோப் கார் ஒரு மாதத்துக்கு நிறுத்தம்..!!

பழநி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் ரோப் கார் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (ஆக.19) முதல் ஒரு மாதம் நிறுத்தப்பட உள்ளது. மாதந்தோறும் ஒரு முறையும், வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ஒரு மாதமும் ரோப் கார் சேவை நிறுத்தப்படுகிறது. அதன்படி, நாளை (ஆக.19) முதல் ஒரு மாதம் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப் கார் நிறுத்தப்பட உள்ளது. இதனால் பக்தர்கள் மின் இழுவை ரயில், படிப்பாதை மற்றும் யானைப் பாதையை பயன்படுத்தி மலைக்கோயில் செல்லலாம் என…

மேலும் படிக்க

விண்வெளியிலிருந்து பூமியில் உள்ள மகனுடன் பேசிய தந்தை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்தவர் விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி. இவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 6 மாதங்களாக பணியில் உள்ளார். இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் முகமது பின் ரஷித் (எம்பிஆர்) விண்வெளி மையம் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில் சர்வதே விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுல்தான் அல் நெயாடி பூமியில் உள்ள தனது மகனுடன் வீடியோ காலில் பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி பூமிக்கு திரும்பும் அல்…

மேலும் படிக்க

போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களின் தற்கொலையை தடுக்க மாவட்ட நிர்வாகம் எடுத்த வினோத முடிவு..!!

நாடு முழுவதும் போட்டித்தேர்வுகள் மற்றும் ஜேஇஇ, நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளுக்கு லட்சக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வுகளில் வெற்றிபெற பயிற்சி எடுத்து வருகின்றனர். குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டத்தில் அதிக அளவில் பயிற்சி மையங்கள் உள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த மாவட்டத்திற்கு வரும் மாணவர்கள் இங்கு தங்கி பயிற்சி மையங்களில் நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளில் வெற்றிபெற பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு, விடுதிகளில் தங்கி போட்டித்தேர்வுகளுக்கும்,…

மேலும் படிக்க

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு..!!

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. இருப்பினும் அணையில் இருந்து பாசன தேவைக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அணையில் இருந்து 6 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 8 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு…

மேலும் படிக்க

அமைச்சரின் காலடியில் குழந்தையை வைத்து கோரிக்கை விடுத்த ஊழியர்..!!

கோவை மாவட்டம் சார்பில் சுங்கம் பகுதியில் உள்ள போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து கழகத்தில், பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வாரிசு பணி வழங்குதல், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் கோவை மாவட்ட பணிமனை அளவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற பணியாளர்களின் குழந்தைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram