மெரினாவில் நண்பர்களுடன் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி பள்ளி மாணவன் மாயம்..!!
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் அருள் (வயது 14). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அருள் தன்னுடைய நண்பர்களான யோகேஸ்வரன், தர்ஷன் ஆகியோருடன் மெரினா கடற்கரைக்கு வந்தார். பின்னர் திருவள்ளுவர் சிலைக்கு அருகே கடலில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது மாணவர்கள் 3 பேரும் கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் கூச்சலிட்டனர். இதை அங்கிருந்த பொதுமக்கள்…