தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 23) சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.43,728-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த மே மாதம் புதிய உச்சத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (புதன்கிழமை) கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.5,466-க்கு…

மேலும் படிக்க

புழல் சிறையில் 5 கைதிகளிடம் இருந்து 7 செல்போன்கள்..!!

சென்னை புழல் சிறையில் மத்திய விசாரணை சிறை, தண்டனை சிறை, மகளிர் சிறை என 3 சிறைகள் உள்ளன. இங்கு 150க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். தண்டனை மற்றும் விசாரணை சிறைகளில் கைதிகளிடம் கஞ்சா மற்றும் செல்போன் பறிமுதல் செய்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் விசாரணை மற்றும் தண்டனை சிறையில் கைதிகள் செல்போன் பயன்படுத்தி வருவதாக சிறைத்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கைதிகளிடம் போலீசார் அதிரடி…

மேலும் படிக்க

பீர்பாட்டிலால் டெய்லர் குத்திக்கொலை..!!

திருப்பூர்-காங்கயம் ரோடு பெரியதோட்டம் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 27). பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து குழந்தை உள்ளது. இவருக்கும் இவருடைய நண்பர் திருப்பூர் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த பனியன் நிறுவன டெய்லரான முகமது இலியாஸ் (28) என்பவருக்கும் கடந்த 20-ந் தேதி பெரியதோட்டம் பகுதியில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முகமது இலியாசின் மனைவியை முகமது ரபீக் தவறாக பேசியதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம்…

மேலும் படிக்க

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லேண்டர்..!!

பூமியின் துணைக்கோளான நிலவு (சந்திரன்) பற்றிய ஆராய்ச்சியில், ரஷியா, அமெரிக்கா, சீனா, ஜப்பானுக்கு அடுத்தபடியாக, முன்னணியில் உள்ள இந்தியா இதுவரை, சந்திரயான்-1, சந்திரயான்-2 ஆகிய இரண்டு விண்கலங்களை நிலவுக்கு அனுப்பி, அங்கு தண்ணீர் உள்ளது என உறுதி செய்துள்ளது. பூமிக்கும், நிலவுக்கும் இடையேயுள்ள 3 லட்சத்து 84 ஆயிரம் கி.மீ. தொலைவை 40 நாட்கள் பயணித்து கடக்கும் திட்டத்துடன் புறப்பட்ட சந்திரயான்-3, முதலில் புவி வட்டப்பாதையில் பல்வேறு நிலைகளில் சுற்றிவந்து, பிறகு நிலவு நோக்கி பயணித்து, அதன்…

மேலும் படிக்க

மிசோரம் மாநிலத்தில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து..!!

மிசோரம் மாநிலம் சாய்ராங் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. மிசோரம் தலைநகர் அய்ஸ்வாலில் இருந்து சுமார் 21 கி.மீ., தள்ளியிருக்கும் சாய்ரங் பகுதியில் புதன்கிழமை 11 மணிக்கு இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்து நடக்கும் போது அங்கு 40 தொழிலாளிகள் பாலத்தில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. “இடிபாடுகளில் இருந்து இதுவரை 17 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும், பலர்…

மேலும் படிக்க

சந்திரயான் 3-ன் லேண்டரை தரையிறக்கும் பணி..!!

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35 மணிக்கு ’சந்திரயான்-3’ விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. பின்னர் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்த சந்திரயான் 3-ன் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டது.இந்தியாவின் பெருமையாக கருதப்படும் இந்த நிகழ்வைக் காண உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ’சந்திராயன்-3’-ன் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் காட்சி இன்று மாலை 5.20 மணி முதல் இஸ்ரோவின் இணையதளம், இஸ்ரோ ஃபேஸ்புக் பக்கம் மற்றும் அரசு…

மேலும் படிக்க

பஞ்சாபில் கனமழை..!!

பஞ்சாப் மற்றும் ஹிமாசல பிரதேசத்தில் கடந்த சில நாள்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகின்றது. அதோடு பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கும் ஆகஸ்ட் 23 முதல் ஆகஸ்ட் 26-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். NEWS EDITOR : RP

மேலும் படிக்க

சந்திரயான் ஒருபக்கம்..!! சதுரங்க நாயகன் பிரக்ஞானந்தா மறுபக்கம்..!!

சதுரங்க உலகக் கோப்பை தொடர் வரலாற்றிலேயே முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற பெருமையை பெற்று, உலகையே தான் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் பிரக்ஞானந்தா… இந்திய மண்ணின் செஸ் வரலாறுகளை கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் எண்ணற்ற ஆளுமைகள் இருந்தாலும், தனித்து நிற்கும் இந்த பிரக்ஞானந்தா தனக்கென்று ஒரு பாணியை பின்பற்றி தரமான சம்பவங்களை அடுத்தடுத்து செய்து வருகிறார்.   இந்தியாவில் 80-க்கும் மேற்பட்ட கிராண்ட் மாஸ்டர்கள் உருவெடுத்திருந்தாலும், தன்னைத் தானே செதுக்கிக்கொண்டே போகும்…

மேலும் படிக்க

திருநின்றவூரில் ரெயில் தண்டவாளத்தில் திடீர் விரிசல்..!!

நெமிலிச்சேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் இன்று காலை விரிசல் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உடனடியாக அந்த வழியாக வந்து கொண்டிருந்த போடி சென்னை ரெயில் நிறுத்தப்பட்டு ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து நெமிலிச்சேரி வழியாக சென்னை வந்து கொண்டிருந்த 6 விரைவு ரெயில்கள் நிறுத்தப்பட்டன. விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை சரிசெய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தண்டவாளத்தை சரிசெய்த பிறகு ரெயில்கள் வழக்கம் போல் மீண்டும் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். NEWS…

மேலும் படிக்க

மாணவ-மாணவிகளுடன் காலை உணவு சாப்பிட்ட கலெக்டர்..!!

காஞ்சீபுரம் மாநகராட்சியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ், அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் 5 நாட்களிலும் வெவ்வேறு வகையான சிற்றுண்டிகள் 37 பள்ளிகளில் 3 ஆயிரத்து 579 மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றன. திங்கட்கிழமை ரவா உப்புமா, சாம்பாரும், செவ்வாய்க்கிழமை சோள காய்கறி கிச்சடியும், புதன்கிழமை வெண்பொங்கல் சாம்பாரும், வியாழக்கிழமை அரிசி உப்புமா, சாம்பாரும், வெள்ளிக்கிழமை கோதுமை ரவா கிச்சடி அல்லது ரவா கேசரியும்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram