நேபாளத்தில் சாலை விபத்தில் 6 இந்திய யாத்ரீகர்கள் உட்பட 7 பேர் பலி..!!
நேபாளத்தின் பாரா மாவட்டத்தல் நடந்த சாலை விபத்தில் 6 இந்தியர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காத்மாண்டுவில் இருந்து ஜனக்பூருக்குச் சென்று கொண்டிருந்த பஸ், இந்திய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்றபோது, பாராவில் உள்ள சூரியாமை அருகே விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இரண்டு ஓட்டுநர்கள் மற்றும் ஒரு உதவியாளர் உட்பட மொத்தம் 27 பேர் பஸ்சில் இருந்தனர். NEWS EDITOR : RP