இந்தோனேசியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று  அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது..!!

கடந்த சில ஆண்டுகளாக இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம்  ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை பாலி தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதி அடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.ரிக்டர் அளவு கோலில் 7.1 ஆகப் பதிவாகியிருந்ததாகவும், இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி கிலி ஏர் பகுதியிலிருந்து 181 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாலி கடலின் மையத்தில் அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு…

மேலும் படிக்க

குறுவை பயிர்களைக் காக்க உச்ச நீதிமன்றத்தை தமிழகம் உடனே அணுக வேண்டும்..!!

காவிரி வழக்கு செப்டம்பர் ஒன்றாம் தேதி விசாரணைக்கு வரும் வரை காத்திருக்காமல், உடனடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகி தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்க ஆணையிடும்படி தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “புது டெல்லியில் நேற்று நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் கூட்டத்தில், தமிழ்நாட்டில் கருகும் நிலையில் உள்ள குறுவை பயிர்களைக் காப்பாற்ற வினாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர்…

மேலும் படிக்க

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று இயங்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது..!!

இந்தியாவில் மிகப்பெரிய பழமையான உயிரியல் பூங்கா வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவாகும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த பூங்காவை சுற்றிப் பார்க்க மக்கள் வருகை தருகின்றனர். வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை விடப்படும்.ஓணம் பண்டிகையை முன்னிட்டு பார்வையாளர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால் வண்டலூர் பூங்கா இன்று இயங்கும் என அறிவிக்கப்ட்டுள்ளது. இந்த நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று இயங்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. NEWS…

மேலும் படிக்க

காவிரியில் வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட காவிரி மேலாண்மை ஆணையத்தில் வலியுறுத்தப்படும்..!!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் கடந்த 11-ந்தேதி டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், “தமிழ்நாட்டுக்கு முறைப்படி திறந்து விடவேண்டிய தண்ணீரை கர்நாடகம் திறந்து விடவில்லை. அதுகுறித்த உத்தரவுகளை கர்நாடக அரசுக்கு ஆணையம் பிறப்பிக்க வேண்டும்” என தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினார்கள். ஆனால் கர்நாடக அதிகாரிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் தமிழக அதிகாரிகளிடம் மிரட்டும் தொனியில் பேசியதாக தெரிகிறது. இதனால் தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர். இதற்கிடையே, வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் 37.9 டி.எம்.சி…

மேலும் படிக்க

ரெயில் விபத்து தொடர்பாக 40க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது..!!

உத்தரபிரதேசத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா செல்வதற்கு 63 பேர் ரெயில் மூலம் மதுரை ரெயில் நிலையம் வந்தனர். அவர்களுக்கு தனியாக ஒரு பெட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதுரையில் அந்த பெட்டி மட்டும் தனியாக கழற்றி போடிலைன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அங்கு கடந்த 26 ஆம் தேதி அதிகாலை டீ போடுவதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைக்கும்போது சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த பெட்டியில் இருந்த 5 ஆண்கள், 4 பெண்கள் என…

மேலும் படிக்க

தமிழகத்திற்கு 5,000 கன அடி காவிரி நீர் திறக்க ஒழுங்காற்றுகுழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்..!!

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை அம்மாநில அரசு தரவில்லை என்பதால், தமிழக அரசு தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் மூலமாகவும், மத்திய அரசு மூலமாகவும் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பெயரில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவின்படி, காவிரியில் இருந்து கடந்த 4 மாதங்காளாக தமிழகத்திற்கு கர்நாடக அரசு தரவேண்டிய தண்ணீர் அளவானது, ஜூன் மாதம் 9 டிஎம்சி,…

மேலும் படிக்க

 ‘எலுமிச்சை’ விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது..!!

திண்டுக்கல்லில் உள்ள சிறுமலை செட் பகுதியில் ஞாயிறு, புதன், வெள்ளிக் கிழமைகளில் எலுமிச்சை சந்தை நடைபெறுகிறது. திங்கள் கிழமை வாழைச் சந்தை, சீசன் காலங்களில் பலாப் பழம் உள்ளிட்ட மாவட்டத்தில் விளையும் பழங்களை இங்கு கொண்டு வந்து விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை அடிவாரக் கிராமங்களான வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, கொடைக்கானல் மலையடிவாரப் பகுதியான அய்யம்பாளையம், கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அதிக பரப்பளவில் எலுமிச்சை சாகுபடி நடக்கிறது. இப்பகுதியில் விளையும் எலுமிச்சம் பழங்கள், திண்டுக்கல்…

மேலும் படிக்க

 தங்கம் விலை : சவரன் ரூ.43,840-க்கு விற்பனை..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (திங்கள்கிழமை) எந்தவித மாற்றமுமின்றி முந்தையநாள் விலையான கிராம் ரூ.5,480-க்கு விற்பனையாகிறது. சவரன் ரூ.43,840-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.47,600-க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலையும் எந்தவித மாற்றுமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.80.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.80,000 ஆக இருக்கிறது. NEWS EDITOR : RP

மேலும் படிக்க

இஸ்லாமிய மாணவிகளை கூனிக்குறுக வைத்த தண்டனை : ஆசிரியர் சஸ்பெண்ட்..!!

இந்தோனேசியாவின் பிரதான தீவான கிழக்கு ஜாவா தீவில் உள்ளது லாமங்கன் நகரம். இங்குள்ள அரசு ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் இஸ்லாமிய மாணவிகள் சிலர் ஹிஜாப் முக்காடுகளை சரியாக அணியாமல் பள்ளிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை அவமானப்படுத்தும் வகையில் ஆசிரியர் தண்டனை வழங்கியிருக்கிறார். 14 மாணவிகளின் தலைமுடியை பாதி அளவுக்கு ஷேவ் செய்துள்ளார். இதனால் மாணவிகள் அவமானத்தில் கூனிக்குறுகினர்.இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும்,…

மேலும் படிக்க

இங்கிலாந் : விமான கட்டுப்பாட்டு மையங்களில் தொழில்நுட்பக் கோளாறால் நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது..!!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இங்கிலாந்து விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய விமான சேவை தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் தொழில்நுட்பச் சிக்கல் எழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இது தொடர்பாக இங்கிலாந்தின் தேசிய விமான சேவை தெரிவிக்கையில், “எதிர்கொள்ளும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமானங்களுக்கு சில பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இதனால் விமானங்கள் தாமதமாகலாம்” என வலியுறுத்தியுள்ளது. தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக விமான போக்குவரத்து…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram