தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 02) சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.44,360-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த மே மாதம் புதிய உச்சத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து பெரிய மாற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.வெள்ளி விலை கிராமுக்கு 00.20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.00-க்கு விற்பனையாகிறது. ஒரு…

மேலும் படிக்க

நிலவின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள புதிய பள்ளம்..!!

நிலவின் தென் துருவ பகுதியை ஆராய சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா அனுப்பியதற்கு போட்டியாக ரஷியா லூனா-25 விண்கலத்தை அனுப்பியது. சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்குவதற்கு முன்பாக லூனா-25 விண்கலத்தை தரையிறக்க ரஷிய விண்வெளி நிறுவனம் தீவிரமாக செயல்பட்டது. புவி மற்றும் நிலவின் சுற்றுவட்ட பாதைகளை அதிவேகமாக கடந்து சென்ற லூனா-25 விண்கலத்தை தரையிறக்குவதற்கு முந்தைய சுற்றுவட்டபாதைக்குள் கடந்த மாதம் 19-ம் தேதி நுழையும் போது கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து நொறுங்கியது. இந்த லூனா-25 விண்கலம் விழுந்த…

மேலும் படிக்க

கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர், மனைவியின் ஆடைகளை களைந்து, நிர்வாண கோலத்தில் ஊர்வலம்..!!

ராஜஸ்தானில் வேறொரு நபருடன் தொடர்பு என கூறி கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர், மனைவியின் ஆடைகளை களைந்து, நிர்வாண கோலத்தில் ஊர்வலம் அழைத்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. ராஜஸ்தானின் பிரதாப்கார் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெண் ஒருவருக்கு திருமணம் நடந்தது. எனினும், அந்த பெண்ணுக்கு, அண்டை வீட்டில் வசிக்கும் வேறொரு நபருடன் தொடர்பு உள்ளது என கணவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், மனைவியை கணவர் மற்றும்…

மேலும் படிக்க

மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு தொழிலாளி கொன்றார்..!!

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருக்கு செல்வராணி (37) என்ற மனைவியும், தமிழரசி (15) என்ற மகளும், ஓம்பிரசாத், பிரசன்னா என்ற மகன்களும் உள்ளனர். லாரியை வைத்து வாடகைக்கு ஓட்டி வந்த நிலையில் ஸ்ரீதர் மது போதைக்கு அடிமையானதாக தெரிகிறது. இந்த நிலையில் லாரியையும் விற்றுவிட்டார். தற்போது கல் உடைக்கும் கூலி வேலை செய்து வருகிறார். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம் இந்த…

மேலும் படிக்க

குடும்பத்தகராறு காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்..!!

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி வேடபாளையம் காலனி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் அருள் (வயது 40). ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி டிலைலா (33). திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அருளுக்கும் டிலைலாவுக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு 3-வது குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகிறது. நேற்று முன்தினம் நீ வேண்டுமானால் உன்னுடைய தாய் வீட்டுக்கு போ என்று மனைவி டிலைலாவிடம் சொல்லிவிட்டு அருள் பள்ளிகூடத்திற்கு…

மேலும் படிக்க

மனைவி அளித்த குற்றச்சாட்டின் பேரில் வாலிபருக்கு மொட்டை அடித்து, செருப்பு மாலை அணிவித்து கடுமையாக தாக்கி உள்ளனர்..!!

பீகாரின் கதிகார் மாவட்டத்தில் கபார் கிராமத்தில் மாவு மில் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளராக ராஜீவ் குமார் இருந்து வருகிறார். இந்த மில்லில் தொழிலாளியாக பணியாற்றி வருபவர் ஆனந்த். இந்நிலையில், காலப்போக்கில் ராஜீவின் மனைவிக்கும், ஆனந்துக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதன்பின்னர் இருவரும் மொபைல் போன் வழியே உரையாடி வந்துள்ளனர். இந்த நிலையில், திடீரென ஒரு நாள் ஆனந்துக்கு எதிராக ராஜீவின் மனைவி குற்றச்சாட்டு கூறியுள்ளார். கடந்த 3 மாதங்களாக ஆனந்த் தன்னை துன்புறுத்தி வந்துள்ளார் என்றும்,…

மேலும் படிக்க

2,000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு செல்லாது : ரிசர்வ் வங்கி..!!

2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்படுவதாகவும் 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்கள் மற்றும் அனைத்து வங்கி கிளைகளிலும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். இந்தநிலையில், நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் தற்போது வரை 93% நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. திரும்ப பெறப்பட்ட ரூ.2,000 நோட்டுகளில் 76% வைப்புத் தொகையாகவும் 13% மற்ற…

மேலும் படிக்க

மத்திய பிரதேசத்தின் சாகர் நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் கடைக்காரர்கள் சிலர், ஒரு பெண்ணை ஈவு இரக்கமின்றி தாக்கிய சம்பவம்..!!

பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஒரு கடையின் முன்பு பெண் ஒருவர் தனது கைக்குழந்தையை தரையில் படுக்க வைத்துவிட்டு அருகில் அமர்ந்துள்ளார். அங்கு அமரக்கூடாது எனக் கூறி ஒருவர் அந்த பெண்ணை தரதரவென இழுத்துச் சென்றுள்ளார். மற்றொருவர் அந்த பெண்ணை எட்டி உதைத்துள்ளார். வலி தாங்காமல் அழுத அந்த பெண்ணை இன்னொருவர் கம்பியால் அடித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி 4 பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி…

மேலும் படிக்க

ஐதராபாத்தில் தனது மனைவியுடன் தங்கி இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்..!!

பாகிஸ்தானின் கைபர் பக்டுங்க்வா மாகாணத்தைச் சேர்ந்த பயாஸ் முகமது என்ற நபர் கடந்த 2018-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைக்காக சென்றுள்ளார். அங்கு இந்தியாவைச் சேர்ந்த 29 வயது பெண் ஒருவருடன் பயாஸ் முகமதுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பயாஸ் முகமதின் மனைவி இந்தியாவிற்கு திரும்பியுள்ளார். இதைத்…

மேலும் படிக்க

கொடைரோடு அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்..!!

கொடைரோடு அருகே உள்ள அழகம்பட்டியை சேர்ந்தவர் அழகேசன் (வயது 48). விவசாயி. அவருடைய மனைவி ருக்குமணி. இவரிடம், மதுபானம் குடிப்பதற்காக அழகேசன் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் மனம் உடைந்த அழகேசன், கடந்த 29-ந்தேதி விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அழகேசன் நேற்று பரிதாபமாக இறந்தார். NEWS EDITOR : RP

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram