இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் தொடர்ந்து 470-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. NEWS EDITOR : RP

மேலும் படிக்க

பிளாஸ்டிக் கழிவுகளால் ஆறு மாசுபடுகிறது

வருசநாடு அருகே வெள்ளிமலை வனப்பகுதியில் மூலவைகை ஆறு உற்பத்தியாகிறது. இந்த ஆறு, கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை உள்ளிட்ட பகுதிகளின் முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது. கடந்த சில மாதங்களாக போதிய மழை பெய்யாததால் நீர்வரத்து இன்றி மூலவைகை ஆறு வறண்டு கிடக்கிறது. இந்தநிலையில் மூலவைகை ஆறு மாசடையும் வகையில் ஆற்றில் சாக்கடை கழிவுநீர் கலப்பதுடன், குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கிக்கிடக்கிறது. குறிப்பாக வருசநாடு கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த…

மேலும் படிக்க

பாஜக யாத்திரை இன்று தொடங்குகிறது

மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சவுகான் தலைமையிலான மாநில ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் வருகிற நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இன்னும் நாட்கள் இருக்கும் நிலையில், ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மத்திய பிரேதசத்தில் ‘ஜன் ஆசிர்வாத்’ என்ற யாத்திரையை பா.ஜனதா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. சத்னா மாவட்டம் சித்திரகூட் என்ற இடத்தில் யாத்திரையை…

மேலும் படிக்க

1,500 பழங்குடியினர் குடும்பங்களுக்கு வீடு கட்ட ரூ.79 லட்சம் நிதி ஒதுக்கீடு

தமிழக சட்டப்பேரவையில் 2023-24 நிதியாண்டுக்கான மானியக் கோரிக்கையின் மீது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பேசும்போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற 1,000 பழங்குடியினர் குடும்பங்கள் மற்றும் தற்போது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 500 நரிக்குறவர் குடும்பங்கள் என மொத்தம் 1,500 குடும்பங்களுக்கு ரூ.45 கோடி மதிப்பீட்டில் தகுதியின் அடிப்படையில் வீடுகள் கட்டித் தரப்படும் என அறிவித்தார். அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், 2023-24-ம்ஆண்டில் 1,500 பழங்குடியினர்களுக்கு தமிழகத்தில் 19 மாவட்டங்களில் வீடுகள் கட்டுவதற்கு ரூ.79 கோடியே 28…

மேலும் படிக்க

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலையை 15 காசுகள் குறைக்க முடிவு செய்தனர்..!!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 415 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையை 15 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை விலை 4 ரூபாயாக குறைந்துள்ளது. அதேபோல் கறிக்கோழி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை ரூ.2 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கறிக்கோழி…

மேலும் படிக்க

நடிகை ‘விஜயலட்சுமி’ அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ‘சீமானிடம்’ விசாரணை நடத்த தனிப்படை போலீசார் ஊட்டி விரைந்துள்ளனர்..!!

நடிகர் விஜய் நடித்த ‘பிரண்ட்ஸ்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக கடந்த 2011-ம் ஆண்டு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி சென்னை, ராமாபுரம் போலீஸ் நிலையத்துக்கு வந்த விஜயலட்சுமி, சீமான் மீது நடவடிக்கை எடுக்கும் படியும், நிறுத்தி வைத்த வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்கும்படி புகார் கொடுத்தார். இதுகுறித்து…

மேலும் படிக்க

 ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘அன்பே சிவம்’, ‘கார்கி’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த “ஆர்.எஸ்.சிவாஜி” காலமானார்..!!

நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி 1981ஆம் ஆண்டு வெளியான ‘பன்னீர் புஷ்பங்கள்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகரும் இயக்குநருமான சந்தானபாரதியின் சகோதரர் ஆவார். ‘மீண்டும் ஒரு காதல் கதை’, ‘விக்ரம்’, ‘சத்யா’, ‘ஜீவா’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், 1989ஆம் ஆண்டு வெளியான ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. ஜனகராஜுடன் சேர்ந்து இவர் பேசும் ‘எங்கேயோ போய்ட்டீங்க சார்’ என்ற வசனம் மிகவும் பிரபலம்.இன்று (செப்.,02) காலை உடல்நலக்குறைவு காரணமாக ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்….

மேலும் படிக்க

“Live-In Relationships” இந்தியாவில் திருமண அமைப்பை அழிக்க முயற்சி..!!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் அளித்த புகாரின் பேரில் அட்னான் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அந்த இளம் பெண், அட்னான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்ததாகவும், அதன் காரணமாகவே அவரோடு ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும், தற்போது தான் கருவுற்றிருப்பதாகவும், ஆனால் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.கைது செய்யப்பட்ட அட்னான் ஜாமீன் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை…

மேலும் படிக்க

சூரியனை நோக்கிய தனது நீண்ட பயணத்தை ‘ஆதித்யா எல்-1’ விண்கலன் வெற்றிகரமாகத் தொடங்கியதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்தார்..!!

இன்று காலை 11.50 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலன் விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் ஏவப்பட்டத்தில் இருந்து முதல் 63 நிமிடங்கள் மிக முக்கியமானதாக, சவால் நிறைந்ததாக இருந்தது. ராக்கெட் தனது பல்வேறு படிநிலைகளையும் வெற்றிகரமாகக் கடந்த நிலையில் 63 நிமிடங்களுக்குப் பின்னர் மிஷன் வெற்றியை இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இஸ்ரோ மையத்தில் பேசிய அவர், “ஆதித்யா எல்-1 விண்கலன்…

மேலும் படிக்க

பள்ளி மாணவன் பலியான சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் மோதிய வாலிபரும் இறந்தார்..!!

காட்பாடி கிளித்தான்பட்டரை அடுத்த வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் (வயது 17), தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு டியூசன் சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்தவழியாக வந்த மோட்டார் சைக்கிள் தனுஷ் மீது மோதியதில் மாணவன் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த எல்.ஜி.புதூர் கிராமத்தை சேர்ந்த கதிரவன் (வயது 19) படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram