சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு டெல்லியில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது..!!

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிப்பதுபோல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு டெல்லியில் எதிர்ப்பு தெரிவித்து டெல்லி தமிழ்நாடு அரசு இல்ல முதன்மை ஆணையரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி பாஜக தலைவர் விரேந்திர சச்தேவா தலைமையில் மூத்த தலைவர்கள் குழு எதிர்ப்பு கடிதம்…

மேலும் படிக்க

 திண்டிவனம் : சட்டப்பேரவை தொகுதியில் தீர்க்க முடியாத 10 கோரிக்கைகளில் ஒரு கோரிக்கையைகூட நிறைவேற்ற அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை..!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதியில் தீர்க்க முடியாத 10 கோரிக்கைகளை, அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டும் என எம்எல்ஏக்களுக்கு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அறிவுறுத்தினார். அதன்பேரில் திண்டிவனம் அதிமுக எம்எல்ஏ அர்ஜூனன், தனது தொகுதியில் நீண்ட நாட்களாக மக்கள் முன்வைக்கப்படும், முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அப்போதைய ஆட்சியர் மோகனிடம் வழங்கினார். மனு அளித்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், மனுக்கள் மீதான நடவடிக்கை எந்த அளவுக்கு உள்ளது என திண்டிவனம்…

மேலும் படிக்க

 தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 02) சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.44,360-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த மே மாதம் புதிய உச்சத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து பெரிய மாற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.வெள்ளி விலை கிராமுக்கு 00.20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.00-க்கு விற்பனையாகிறது. ஒரு…

மேலும் படிக்க

சவுரவ் கங்குலியின் வாழ்க்கை கதை சினிமாவாக இருக்கிறது..!!

விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கை கதைகள் சினிமாவாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. பிரபல கிரிக்கெட் வீரர்கள் தோனி, சச்சின் டெண்டுல்கர், முகமது அசாருதீன் ஆகியோரின் வாழ்க்கைக் கதைகளைக் கொண்ட படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.அண்மையில் 1983 ஆம் ஆண்டு இந்திய அணி, உலக கோப்பையை வென்றதை மையமாக வைத்து ’83’ என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின்…

மேலும் படிக்க

அமெரிக்கா : மாவி தீவில் காட்டுத் தீ ஏற்பட்ட பகுதிகளில் இன்னும் 385 பேரைக் காணவில்லை..!!

அமெரிக்காவில் உள்ள மாவி தீவில் கடந்த ஒரு மாதமாக காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. இதில் லஹேனா நகரம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. லஹேனாவில் 13,000 கட்டடங்கள் சேதமடைந்தன. மேற்கு மாவி பகுதியில் 2,200 கட்டடங்கள் சேதமடைந்தன. “மாவி தீவில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள லஹேனா, புலேஹு மற்றும் மத்தியப் பகுதிகளில் காணாமல் போனதாக 388 பேரின் பெயா்கள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. எனினும், அந்தப் பட்டியலில் இருந்த 245 போ் இருக்கும் இடம்…

மேலும் படிக்க

சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை பெய்துவருகிறது..!!

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்து இருந்தது. இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை பெய்துவருகிறது. சென்னை அடையாறு, பட்டினப்பாக்கம், மந்தைவெளி, தியாகராய நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மாம்பலம், அசோக் நகர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன்…

மேலும் படிக்க

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான காய்ச்சல் அறிகுறி காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் சோனியா காந்தி இருப்பதாகவும் அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. NEWS EDITOR : RP

மேலும் படிக்க

4 நாட்கள் பொதுக்கூட்டம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா வரும் செப்டம்பர் 15-ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அண்ணா சிலைகள் மற்றும் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. இந்த நிலையில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை ஒட்டி செப்டம்பர் 15, 16, 17, 19 ஆகிய 4 நாட்கள் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில், மதுரை மாநாட்டின் தீர்மானங்களை விளக்க…

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே தேர்தலால் அதிமுக பலிகிடா ஆகும்

இந்தியா கூட்டணியின் 3 கூட்டங்களை பார்த்து பயந்து போய் நாடாளுமன்றத்தை பாஜக அரசு கூட்டியுள்ளது. திமுக குடும்பமாக செயல்படுவது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற ஒரு சதி திட்டத்தை தீட்டி ஓர் அதிபராக இருக்க முயற்சி செய்கிறார்கள். அதிமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்த்துவிட்டு தற்போது ஆதரிக்கிறார்கள். ஒரே நாடு…

மேலும் படிக்க

திமுக மாவட்ட நிர்வாகிகள் 2 பேர் கட்சியில் இருந்து சஸ்பெண்

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநதி புகைப்படத்துடன் ‘இன்பநிதி பாசறை’ என்ற வாசகத்துடன் வருகின்ற செப்டம்பர் 24-ம் தேதி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றும் இன்பநதியை எதிர்காலமே என்று குறிப்பிட்டும் மண்ணை பிளக்காமல் விதைகள் முளைப்பதில்லை போராட்ட களம் இன்றி வெற்றிகள் கிடைப்பதில்லை என்ற வாசகத்துடன் புதுக்கோட்டை நகரபகுதி முழுவதும் திமுகவை சேர்ந்த இருவர் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram