ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்..!!
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந் தேதி ‘ஆசிரியர் தின விழா’ கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாடுமுழுவதும் இன்று (செவ்வாய்கிழமை) ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கல்வியுடன் இணைந்து உயரிய பண்பாட்டையும் அறநெறிகளையும் ஒழுக்கத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் மாணவ சமுதாயத்துக்குக் கற்றுத்தரும் அறிவுப் பெற்றோராக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தன்னை உருக்கி அறிவூட்டும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்….