விலை குறைவால் உடுமலை பகுதியில் சாலையோரம் தக்காளி கொட்டப்பட்டுள்ளது..!!
உடுமலை பகுதியில் ஆண்டு முழுவதும் பல்வேறு பட்டங்களில் தக்காளி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலவிய கடும் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை, காலநிலை மாற்றம் காரணமாக தக்காளி சாகுபடி பரப்பளவு குறைந்ததோடு, உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் தக்காளியின் விலை மளமளவென உயர்ந்து கிலோ ரூ.180-க்கும் மேலாக விற்பனையானது. அதைத் தொடர்ந்து ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடிக்கு திரும்பினார்கள். அதன் பயனாக உற்பத்தியும் அதிகரித்தது. இதனால் அதன் விலையும் படிப்படியாக குறைந்து…