புதுமைப்பெண் திட்டம், பெண்களின் உயர்கல்வி விகிதத்தை அதிகரித்து வருகிறது ~ மு.க.ஸ்டாலின்..!!
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி பதவிக்கு வந்ததும் முதலில் கையொப்பமிட்டது பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து பயணம். இது பெண்களின் வெளிப்புறப் பயணங்களை சுலபமாக்கியது. பள்ளிக்கூடங்களில் சத்தான காலை உணவுத் திட்டம் குடும்பப் பெண்களின் காலை நேர வேலை சுமையை பெரிதும் குறைத்ததோடு, வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு உத்வேகத்தையும் அளித்துள்ளது. அதையும் தாண்டி குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்து, கற்கும் திறனை மேம்படுத்தியுள்ளது. இவை அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை…