தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உள்ள “நயன்தாரா” புதிய தொழிலை துவங்க உள்ளார்..!!

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து, தற்போது இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார். தனது கணவருடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் ஆரம்பித்து, படங்களைத் தயாரித்தும் வருகிறார்.‘சாய் வாலே’ என்ற டீக்கடை வியாபாரத்திலும் பெரும் முதலீடு செய்து அத்தனையும் நடத்தி வரும் நயன்தார சமீபத்தில் சென்னையில் பிரபலமாக இருந்து, இழுத்து மூடப்பட்ட, திரையரங்கமான அகஸ்தியா என்ற திரையரங்கை வங்கியதாக தகவல்கள் வெளியாகியானது. சில ஆண்டுகளாக…

மேலும் படிக்க

‘சீமான்’ மீதான வழக்கை வாபஸ் வாங்கிய ‘நடிகை விஜயலட்சுமி’..!!

சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்கியுள்ளார் நடிகை விஜயலட்சுமி. எழுத்துப்பூர்வமாக புகார் மனு அளித்திருந்த நிலையில் அதனை வாபஸ் வாங்கியுள்ளார். மேலும், “வழக்கை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை. புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. என்னால் தனி ஒருவராக போராட முடியவில்லை. சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை” என்றும் நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்….

மேலும் படிக்க

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு ரூ.1,000 பெற்ற இல்லத்தரசிகள் இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்..!!

தமிழக அரசு சார்பில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்ட தொடக்க விழா நேற்று நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சீபுரத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். ஆனால் அதற்கு முன்னதாக அதாவது நேற்று முன்தினமே பெரும்பாலான பெண்களின் வங்கி கணக்கில் ரூ.1,000 செலுத்தப்பட்டது. இதனால் இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தேர்வு செய்யப்பட்ட அனைத்து பெண்களின் வங்கி கணக்கிலும் நேற்று ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது. திருவண்ணாமலையை அடுத்த நல்லவன்பாளையம்…

மேலும் படிக்க

சொந்த ஊருக்கு கணவர் அழைத்து செல்லாததால் தளி அருகே வடமாநில பெண் தூக்குப்போட்டு தற்கொலை..!!

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மாதன் சாவ். இவரது மனைவி பூனம் தேவி (வயது 35). இவர்கள் குடும்பத்துடன் தளி அருகே உள்ள அகலகோட்டை பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் பூனம் தேவி தனது சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலத்திற்கு செல்ல வேண்டும் என்று கணவாிடம் கூறினார். அப்போது மாதன் சாவ், 10 நாட்கள் கழித்து செல்லலாம் என கூறி ஊருக்கு அழைத்து செல்ல மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தளி…

மேலும் படிக்க

திருநெல்வேலி : பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்..!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் வகையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சீபுரத்தில் தொடங்கி வைத்தார். நெல்லை மாவட்டத்தில் மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள வர்த்தக மையம் கூட்டரங்கில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். சபாநாயகர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மகளிர் உரிமைத்தொகை…

மேலும் படிக்க

கொலாபாவில் ரூ.1.41 கோடி போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்..!!

தென்மும்பை கொலாபா பகுதியில் நேற்று போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் சந்தேகம் படும்படி நடமாடியதை கண்ட போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் பதுக்கி வைத்திருந்த மெபட்ரோன் என்ற போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து 2 பேரையும் கைது செய்து விசாரித்தனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த கொலாபாவில் பதுங்கி இருந்த ஒருவரும், டோங்கிரியில் பதுங்கி இருந்த மற்றொருவரையும் போலீசார் பிடித்து கைது செய்தனர். பிடிபட்ட 4 பேரிடம் இருந்து…

மேலும் படிக்க

திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது..!!

திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று காலை சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்நிலையில் இந்த விமானத்தில் வந்த ஒரு பயணி கடத்தல் தங்கத்தை விமான நிலையத்தில் பணிபுரியும் ஒரு துறையை சேர்ந்த டிரைவர் மூலம் வெளியே கொண்டு வர முயற்சி நடைபெறுவதாகவும், அந்த தங்கத்தை பெற வாகன நிறுத்தத்தில் ஒருவர் நிற்பதாகவும் தகவல் வந்தது. மேலும் அவர்களிடம் இருந்து ஒரு கிலோ தங்கத்தை பறிமுதல் செய்ததாக…

மேலும் படிக்க

மை 3 வெப் தொடர் இன்று (செப்டம்பர் 15) டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது..!!

சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் எம்.ராஜேஷ், தற்போது ‘மை3’ என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இந்த தொடரில் சாந்தனு, ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், ஜனனி, ஆஷ்னா சாவேரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முகேன், ஒரு பணக்கார பிஸினஸ்மேன். மனித தொடுதல் என்பது அவருக்கு ஒவ்வாமை. யாராவது அவரைத் தொட்டால் அவருக்கு அலர்ஜியாகி, தீவிரமாக பாதிப்புகுள்ளாகிவிடுவார். இளம் விஞ்ஞானியாக வரும் சாந்தனுவால் உருவாக்கப்பட்ட,…

மேலும் படிக்க

பர்கூர் அருகே அச்சமங்கலம் கூட்டுரோட்டில் அமாவாசையில் கூடும் ஜவுளிச் சந்தை..!!

பர்கூர் அருகே வடமாநில தொழிலாளர்களை மையமாக வைத்து அமாவாசை நாளில் ஜவுளிச் சந்தை கூடுகிறது. இதன் மூலம் 50-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் பலன் அடைந்து வருகின்றனர். பர்கூரில் முக்கிய வர்த்தகமாக ஜவுளித் தொழில் உள்ளது. இங்கு கடந்த 1975-ம் ஆண்டில் 5 கடைகளுடன் தொடங்கப்பட்ட ஜவுளிக் கடைகள், 1983-ம் ஆண்டில் ஒரே இடத்தில் 100 கடைகள் கட்டப்பட்டது. இங்கு குறைந்த விலைக்கு ஜவுளிகள் விற்பனை செய்யப்படுவதால், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்திலிருந்து இப்பகுதிக்கு…

மேலும் படிக்க

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 15) சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,000-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த மே மாதம் புதிய உச்சத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து பெரிய மாற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.வெள்ளி விலை 0.50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram