கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது..!!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திட்டமான மகளிருக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டமானது செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாளின்போது தொடங்கப்படும் என்று 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்து இருந்தது. இந்த திட்டத்துக்காக பெண்கள் விண்ணப்பிக்கும் முகாமை கடந்த ஜூலை மாதம் 24-ந்தேதி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னாள் முதல்-அமைச்சர் அறிஞர் அண்ணாவின் 115-வது…

மேலும் படிக்க

வீலிங் செய்தபோது விபத்தில் சிக்கிய பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது..!!

பிரபல யூடியூபரான டிடிஎப் வாசன் ‘மஞ்சள் வீரன்’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இயக்குனர் செல்அம் இயக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. டிடிஎப் வாசன் பைக் வீலிங் செய்தபோது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் ஊராட்சி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அவர் வீலிங் செய்தபோது பைக் தலைகீழாக கவிழ்ந்தது.விபத்தில் சிக்கிய டிடிஎப் வாசன் மீது பாலுசெட்டி சத்திரம் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்…

மேலும் படிக்க

வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகனுடன் ஜோடியாக பங்கேற்ற மணமகள், நேற்று அதிகாலையில் திருமண மண்டபத்தில் இருந்து ஓடிவிட்டார்..!!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் நேற்று உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு மண்டபத்தில் நடக்க இருந்தது. இதற்காக இருவீட்டார் சார்பிலும் அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு உறவினர், நண்பர்களுக்கு வழங்கப்பட்டது.இதையொட்டி நேற்று முன்தினம் இரவு திருமண மண்டபத்தில் பெண் அழைப்பு மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மணமேடையில் மணமக்கள் பங்கேற்றனர். விழாவில்…

மேலும் படிக்க

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது..!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக, கடந்த வாரம் ஒருகிலோ மல்லிகைப்பூ ரூ.600-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று அதிரடியாக ரூ.1,500 முதல் ரூ.1,800 வரை உயர்ந்துள்ளது. புதுக்கோட்டை, கடலூர், திருச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. பூக்களை தொடர்ந்து காய்கறிகள் மற்றும் பழங்களின் விலையும் உயர்ந்துள்ளது. 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ தற்போது 800 ரூபாய்க்கும், 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரளிப்பூ…

மேலும் படிக்க

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது : பிரதமர் மோடி..!!

மாநிலங்களவையில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் விவாதத்தை தொடங்கி வைக்கிறார். இன்று தொடங்கி வருகிற 22-ந்தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற இருக்கிறது. முதல்நாளான இன்று 75 ஆண்டுகால பாராளுமன்றத்தின் சாதனைகள், நினைவுகள் போன்ற முக்கியம்சங்கள் குறித்து விவாதம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் பேசுகிறார். நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் மற்றும் தேசத்தின் சாதனைகள் குறித்து பிரதமர்…

மேலும் படிக்க

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 16) சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.44,240-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த மே மாதம் புதிய உச்சத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து பெரிய மாற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.வெள்ளி விலை 0.70 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.20-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ…

மேலும் படிக்க

இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிரியான காலிஸ்தானிகளுக்கு இங்கு இடமில்லை ~ தஜிந்தர் சங் திவானா..!!

கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்து மத வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்துவது, தூதரக அதிகாரிகளை மிரட்டுவது என அவர்களின் அடாவடி தொடர்கிறது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கனடா அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் இந்திய பிரதமர் மோடி சமீபத்தில் வலியுறுத்தினார்.இதுபற்றி யுவ மோர்ச்சா தலைவர் தஜிந்தர் சங் திவானா கூறுகையில், “இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிரியான…

மேலும் படிக்க

விடுமுறை வருவதால், சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர்..!!

சென்னையில் வசிக்கும் மக்கள் விடுமுறை தினத்தன்று தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். தொடர் விடுமுறை வந்தால் பெரும்பாலான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். சனி, ஞாயிறு மற்றும் விநாயகர் சதுர்த்தி என அடுத்தடுத்து விடுமுறை வருவதால், சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பயணிகளின் வசதிகளுக்காக, சென்னை கோயம்பேட்டில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிகளவு இயக்கப்பட்டன. NEWS EDITOR…

மேலும் படிக்க

கீழ்ப்பாக்கம் : ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டுகள்..!!

தமிழ்நாட்டில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பருவகால காய்ச்சல்களும், நோய் பாதிப்புகளும் தொடங்கியுள்ளது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை டெங்குவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 120-ஐ தாண்டியுள்ளது. இதேபோல, நாள்தோறும் 15 முதல் 20 வரை பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில்…

மேலும் படிக்க

தாம்பரத்தில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா..!!

ஏழை மக்களுக்கு எத்தனையோ நலத்திட்டங்கள் அ.தி.மு.க. அரசில் கொண்டு வரப்பட்டது. அதில் ஏதாவது தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ளதா?. அ.தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்டது என்பதால் செங்கல்பட்டு மாவட்ட அலுவலகத்தை திறக்காமல் தி.மு.க. அரசு வைத்துள்ளது. அ.தி.மு.க. கொண்டு வந்த அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட திட்டங்களுக்கு மூடு விழா நடத்தியது தி.மு.க. அரசு. போதை மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. இதனால் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் தினந்தோறும் நடக்கிறது. எத்தனை வழக்கு போட்டாலும் அதை சந்திக்கும் தெம்பு,…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram