சீர்காழி அருகே  வீட்டில் பூட்டை உடைத்து 7 சவரன் தங்க நகை மற்றும் 55 ஆயிரத்தை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை..!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் கம்பன் நகரில் வசித்துவருபவர் சோமசுந்தரம். டால்மியா சிமெண்ட் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவரான இவர் 13ஆம் தேதி சென்னையில் வசிக்கும் மகன் வீட்டிற்குகுடும்பத்துடன் சென்றுள்ளார். கடந்த ஒரு வார காலமாக வீடு பூட்டி இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 7 சவரன் தங்க நகை மற்றும் 55 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.இதனையடுத்து வீடு திரும்பிய சோமசுந்தரம் வீட்டின் உள்புற கதவுகள் உடைந்திருப்பதை கண்டு…

மேலும் படிக்க

“லியோ” படத்தின் இசை வெளியீட்டு விழா..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் விடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது.இப்படத்தின் எடிட்டிங் பணிகளைத் தொடர்ந்து அடுத்ததாக விஎஃப்எக்ஸ் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இதன்பின், டப்பிங் மேற்கொள்ளபட உள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தின்…

மேலும் படிக்க

தமிழக அரசு பாடத் திட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு இன்று தொடங்குகியது..!!

மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான ஒரே வினாத்தாள் முறை மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் தயாரிக்கப்பட்டு வந்த வினாத்தாள் முறையால் மாணவர்களை மதிப்பீடு செய்வதில் வேறுபாடு ஏற்படுகிறது. அதனால் அனைத்து பள்ளி மாணவர்களும் ஒரே மாதிரியான வினாத்தாள்களை பின்பற்றி தேர்வு எழுதினால் ஏற்றத்தாழ்வு ஏற்படாது என்று கருதி மீண்டும் பொதுவான வினாத்தாள் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. அரசு தேர்வுத்துறையால் தயாரிக்கப்படும் இந்த வினாத்தாள்களை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள்…

மேலும் படிக்க

“நிபா வைரஸ்” காரணமாக; ‘கேரள’ மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் பழ வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது..!!

நிபா வைரஸ் தடுப்ப வழிகாட்டு நெறிமுறைகளில், வௌவால்கள் கடிக்கப்பட்ட பழங்களை மக்கள் சாப்பிட வேண்டாம் என்று கேரள அரசு அறிவுறுத்தியிருந்தது. இதனால், மக்கள் ஒட்டுமொத்தமாக பழங்கள் வாங்குவதையே தவிர்த்துவிட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் பழங்கள் எல்லாமே பெரும்பாலும் வெளிமாநிலங்களில் உற்பத்தியாகும் பழங்கள் தான். கடந்த சில நாள்களாக 70% அளவுக்கு மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக வியாபாரிகள் கூறுகிறார்கள். ஒரு லாரி பழங்கள் ஒரு நாளில் விற்றுத் தீரும். ஆனால், மூன்று நாள்களுக்கு முன்பு வந்த லாரி…

மேலும் படிக்க

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் போலீஸார் கைது செய்தனர்..!!

டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சாத்திரம் அருகே பைக்கில் சென்றபோது சாகசம் செய்ய முயன்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். பைக் சாகசத்தில் ஈடுபட முயன்ற அவரது கை எலும்பு முறிந்துள்ளது. அது தவிர உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான ஒரு வீடியோவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மருத்துவமனையில் அளிக்கப்பட்டு பின்னர், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றி உள்ளதாக…

மேலும் படிக்க

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 19) சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.44,400-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த மே மாதம் புதிய உச்சத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து பெரிய மாற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.வெள்ளி விலை 0.30காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.30-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார்…

மேலும் படிக்க

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை..!!

காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடி தெரு உள்பட பல்வேறு படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் விஜய் ஆண்டனி. இவர் காளி, நான், சைத்தான், பிச்சைக்காரன் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய் ஆண்டனிக்கு மீரா என்ற மகள் உள்ளார். மீரா பிளஸ் 2 பயின்று வந்தார். விஜய் ஆண்டனி தன் குடும்பத்துடன் சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று தூக்கிட்டு தற்கொலை…

மேலும் படிக்க

தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில் விவசாயிகள் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளனர்..!!

தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். அதன்படி, அடுத்த மாதம் அக்டோபர் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இது டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்தும், மழையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை முதல்-அமைச்சர் மு.க….

மேலும் படிக்க

மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்..!!

அம்பத்தூரில் கல்யாணபுரத்தை சேர்ந்தவர் சாரம்மாள் (25). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி 2 மகன்கள் இருந்துள்ளனர்.இந்நிலையில் இவர் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து அம்பத்தூரை சேர்ந்த ஜான்சன் என்பவரை 2 -வதாக திருமணம் செய்துள்ளார். சிறிது நாட்கள் சென்ற பின்னர் தான் தாம் ஏமாற்றி திருமணம் செய்யப்பட்டுள்ளதை அவர் அறிந்துள்ளார். இதனால் சாரம்மாளை விட்டுவிட்டு அவருக்கு தெரியாமல் ஆவடியில் தனியே வீடு எடுத்து தங்கியுள்ளார்.ஜான்சன் ஆவடியில் தங்கி இருப்பதை சாரம்மாள் எப்படியோ தெரிந்து கொண்டார். இந்நிலையில்…

மேலும் படிக்க

அமெரிக்காவில் 2 மாடல் அழகிகள் அடுத்தடுத்து மர்ம மரணம் அடைந்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பங்கர் ஹில் பகுதியில் ஆடம்பர ரக அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர் மலீசா மூனி (வயது 31). மாடல் அழகியான இவர், கடந்த 12-ந்தேதி அவருடைய குடியிருப்பில் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார்.இந்த சம்பவம் நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன், கடந்த 10-ந்தேதி நிக்கோல் கோட்ஸ் (வயது 32) என்பவர் அவருடைய குடியிருப்பில் உயிரிழந்து கிடந்துள்ளார். இந்த இரண்டு சம்பவங்களை பற்றியும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர காவல் துறையினர் விசாரணை…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram