சுமை தூக்கும் தொழிலாளி உடை அணிந்து, பயணிகளின் உடைமைகளை ராகுல் காந்தி சிறிது தூரம் தூக்கி சென்றார்..!!

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரில் நிறைவடைந்தது.இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி சமீப நாட்களாக பொது இடங்களுக்குச் சென்று, டிரைவர், விவசாயிகள், மெக்கானிக்குகள் போன்றோரை சந்தித்து அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை பற்றி கேட்டறிந்து வருகிறார். இந்தநிலையில், டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரெயில் நிலையத்திற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி திடீரென சென்றார். அப்போது ரெயில்…

மேலும் படிக்க

திறந்தவெளியில் வைத்து விற்பனை செய்யப்பட்ட சவர்மா மற்றும் சிக்கன் பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து குப்பை தொட்டியில் வீசினர்..!!

திருவள்ளூர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சிக்கன் சவர்மா சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் இறந்து போனார். இதன் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் சவர்மா குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெகதீஸ்சந்திரபோஸ் தலைமையில் பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சவர்மா கடைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். பத்துக்கும்…

மேலும் படிக்க

வாகனங்களை வாடகைக்கு விடும் திட்டத்தை அறிமுகம் ~ ராயல் என்ஃபீல்டு..!!

இந்தியாவில் வாடகைக்கு விடும் புதிய திட்டத்தை ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்துள்ளது. இது புல்லட் பிரியர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.நம் நாட்டின் குக்கிராமம் முதல் எல்லைப் பகுதி வரை அனைத்து சாலைகளிலும் கடந்த 1949-ல் இருந்து இன்று வரை ஓயாமல் ஓடி கொண்டிருக்கும் இரு சக்கர மோட்டார் வாகனம் தான் ராயல் என்ஃபீல்டு புல்லட். பீரங்கியிலிருந்து வெளிவரும் குண்டுகள் போல புட்டு.. புட்டு.. புட்டு.. என புல்லட்டின் சைலன்சரில் இருந்து வெளிவரும் சத்தமும், சீறி வரும் காளையை…

மேலும் படிக்க

ஊத்தங்கரை போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த தனியார் பள்ளி பஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காமராஜ் நகரை சேர்ந்தவர் அப்துல் சலாம். இவரது மகன் சதாம்உசேன் (வயது 33). பிளாஸ்டிக் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு ஊத்தங்கரையில் திருப்பத்தூர் சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை பக்கமாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி பஸ் சதாம் உசேன் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. மேலும் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ்…

மேலும் படிக்க

கிருஷ்ணகிரியில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்..!!

போச்சம்பள்ளி அருகே உள்ள வேலம்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 34). தொழிலாளி. இவரது மனைவி தனம். இந்த தம்பதிக்கு குழந்தைகள் உள்ளனர். சிவானந்தத்திற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.இதனால் மனமுடைந்த சிவானந்தம் மாமனார் வீட்டு முன்பு உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சம்பவத்தன்றும் அவர்களுக்குள்…

மேலும் படிக்க

உத்தர பிரதேசத்தில் கணவர் வெளியே சென்றபோது கர்ப்பிணி மருமகளை மாமனார் பலாத்காரம் செய்த விவகாரத்தில் புகார்..!!

உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் மீராப்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிக்கந்தர்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் தபசும் (வயது 20). முதசீர் என்பவருக்கும் தபசுமுக்கும் 2022-ம் ஆண்டு ஆகஸ்டில் திருமணம் நடந்தது. தபசும் மீது மாமனார் இஸ்திகார் காமப்பார்வை பார்த்து வந்துள்ளார். கெட்ட நோக்குடனேயே அவரை அணுகியுள்ளார் என தபசும் குற்றச்சாட்டு கூறுகிறார்.கடந்த ஜூலை 5-ந்தேதி முதசீர், மீராப்பூரில் உள்ள மருத்துவர் ஒருவரிடம் காட்டுவதற்காக தாயாரை அழைத்து சென்றுள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு, இஸ்திகார் மருமகளை பாலியல்…

மேலும் படிக்க

தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

20-09-2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21-09-2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 22-09-2023: தமிழ்நாடு, புதுச்சேரி…

மேலும் படிக்க

குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாமை கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார்..!!

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் வட்டம் அனுமந்தபுத்தேரி நகராட்சி தொடக்க பள்ளியில் குழந்தைகள் மையத்தில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாமை கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டத்தின் மக்கள் தொகை 24 லட்சத்து 9 ஆயிரத்து 927 ஆகும். நமது மாவட்டத்தில் 49 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 284 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. நமது மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு…

மேலும் படிக்க

2024-ம் ஆண்டுக்கான முக்கிய நுழைவுத் தேர்வுகள் குறித்த தகவல்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது..!!

தேசிய தேர்வு முகமை நடத்தும் முக்கிய தேர்வாகப் பார்க்கப்படுவது JEE தேர்வு. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் இந்தியாவில் உள்ள IIT, NITகளில் சேர முடியும். அந்த வகையில், 2024-ம் ஆண்டு JEE முதன்மைத் தேர்வு ஜனவரி மாதம் மூன்றாம் வாரத்தில் நடைபெறும் என்றும், இரண்டாவது தேர்வு ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல் க்யூட் தேர்வு 2024-ம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் எனவும், இளநிலை…

மேலும் படிக்க

கனடா தூதரக அதிகாரியை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது..!!

சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என இந்தியாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். கனடாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு, கடந்த மார்ச் மாதம் அவர்கள் போராட்டம் நடத்தினர். காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து, கனடாவில் வசிக்கும் அந்நாட்டு குடியுரிமை பெற்ற காலிஸ்தான் டைகர்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram