திருவாரூரில் தென்னிந்திய அளவிலான மகளிர் கோகோ விளையாட்டுப் போட்டி தொடங்கியது..!!

திருவாரூர் அருகே நீலக்குடி கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கான மகளிர் கோகோ போட்டிகள் இன்று (டிச.26) தொடங்கி டிச. 30-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.முதல்முறையாக மத்திய அரசு சார்பில் தென்னிந்திய பல்கலைக்கழகங்கள் பங்கேற்கும் பெண்களுக்கான மகளிர் கோகோ போட்டிகள் இன்று தொடங்கியது. பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில் போட்டிகள் நடைபெற்றன. போட்டிக்கு சிறப்பு விருந்தினராக இந்திய பல்கலைக்கழகங்களின் சங்க…

மேலும் படிக்க

“ஹிட்லர்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது..!!

சஞ்சய் குமார் தயாரிப்பில், தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படமாக “ஹிட்லர்” உருவாகிவருகிறது. முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக விஜய் ஆண்டனியின் தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி தன் முந்தைய படங்களிலிருந்து விலகி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார்.  முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார் படத்தின்…

மேலும் படிக்க

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன..!!

இந்தியாவிலும் சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள் அடுத்தடுத்து வரும் நிலையில், இந்த தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரிப்பு புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், நாடுகள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.இந்த நிலையில், கொரோனாவின் புதிய வகையான ஜே.என்.1 வைரஸ் தொற்று சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில், கண்காணிப்பு…

மேலும் படிக்க

அடுத்து மூன்று மணி நேரத்தில் ஏழு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான  மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியால், கடந்த சில  தினங்களுக்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அதிகனமழை முதல் கனமழை  பெய்யதது. இந்நிலையில், சில நாட்களாக மழை ஓய்ந்தது.

மேலும் படிக்க

திருச்சி : முசிறி,  சமயபுரம்,  மண்ணச்சநல்லூர் பகுதிகளில் மூடுபனி சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி..!!

அதிகாலை வேளையில் கடும் பனிப்பொழிவு காணப்படும்.  அந்த வகையில், இன்று அதிகாலையில்,  திருச்சியின்  மாநகர் பகுதிகளான  முசிறி,  சமயபுரம், மண்ணச்சநல்லூர் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.  சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி பொழிவு அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.  கடும் பனிப்பொழிவு காரணமாக காலையில் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் சிரமத்துக் குள்ளாகினர்.ஆண்டுதோறும் அக்டோபர்,  நவம்பர்,  டிசம்பர் ஆகிய மாதங்கள் வடகிழக்கு பருவமழை மூலம்…

மேலும் படிக்க

இன்று வெளியான சலார் படத்தை பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தள பக்கத்தில் படம் குறித்த விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்..!!

பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சர்வதேச அளவில் புகழ் பெற்ற நடிகர் பிரபாஸ்,  தற்போது கே.ஜி.எஃப் படங்கள் மூலம் இந்தியளவில் முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ளார் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சலார் Part 1 – Ceasefire திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரபாஸூடன் ஸ்ருதி ஹாசன், பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இன்று உலக முழுவதும்…

மேலும் படிக்க

சென்னையில் தங்கம் விலை உயர்வு..!!

தங்கத்தின் விலை ஒரு நாள் உயர்வதும்,  மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருந்து வருகிறது.  இந்த நிலையில்,  சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.  அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.46,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வரும் நிலையில், இன்று 47,000 நெருங்கியுள்ளது. இது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஒரு கிராம்  30 காசுகள் உயர்ந்து ரூ.80.70-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.300…

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் இன்று முதல் (டிச.22 ), டிச. 28 வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!! 

இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன்படி, டிச. 22 மற்றும் 23 தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. டிச. 24 தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச.25 முதல் 28 வரை…

மேலும் படிக்க

புனித ஹஜ் பயணம் செல்பவர்கள் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது..!!

இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று ஹஜ் புனிதப் பயணம்  மேற்கொள்வது.  இந்த நிலையில் சௌதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு 2024-ம் ஆண்டு ஹஜ் புனித பயணம் செல்வோர் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (டிச.21) முடிவடைய இருந்தது.இந்த நிலையில் அதிகளவிலான இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவதால் விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் இந்திய ஹஜ் சங்கம் கோரிக்கை வைத்திருந்தது.  இதனை தொடர்ந்து ஹஜ் பயணம் செய்பவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜனவரி…

மேலும் படிக்க

2023-ம் ஆண்டில் 1,526 சைபர் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், மோசடி நபர்களிடமிருந்து ரூ. 2.18 கோடி பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது..!!

சென்னை மத்திய குற்ற பிரிவு, சைபர் கிரைம் பிரிவினரால் இந்த கூட்டம் நடத்தப்பட்டது.  இந்த ஒருங்கிணைப்பு கூட்டத்திற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பு கூட்டத்திற்கு வங்கிகள் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களைச் சார்ந்த பொறுப்பு அதிகாரிகள் 60 பேர் பங்கேற்றனர்.  கூட்டத்தின் போது சைபர் குற்ற பிரிவில் 2023-ம் வருடத்தில் மட்டும் 1,526 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் வங்கிகள் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களின் உதவியுடன் குற்ற செயல்களில்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram