தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பாலிசிதாரர்களுக்கு சிறப்பு சலுகை : எல்ஐசி நிறுவனம்..!!
மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாலிசிதாரர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்ட பாலிசிதாரர்கள் தாமதமாகும் தவணைத்தொகைக்கான அபராத தொகையை செலுத்த தேவையில்லை. மேலும், இறப்புரிமங்களை கோருவதற்கான விதிகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, விண்ணப்பம் மற்றும் இறப்புக்கான எளிய ஆதாரம் போதுமானது; போலீஸ் , பிரேத பரிசோதனை அறிக்கை தேவையில்லை.