கிரிக்கெட்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் அஸ்வின்!
இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 13 ஆண்டுகளாக ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடி வருகிறார். தமிழகத்தைச் சேர்ந்த 38 வயதான சுழற்பந்துவீச்சாளர் மற்றும் சிறந்த ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் 2011 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். சர்வதேச போட்டிகளில் இதுவரை மொத்தமாக 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் இதுவரை அதிகபட்சமாக 11 முறை தொடர்நாயகன் விருதை வென்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 6 சதங்கள் உள்பட 3,506 ரன்கள் குவித்த…