சென்னையில் சிறுமியை மாடு முட்டிய சம்பவம்..!!

சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் நேற்று (புதன்கிழமை) மாலை பள்ளி முடிந்து தாயுடன் சென்ற சிறுமியை மாடு முட்டி சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் அது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், “நேற்று மாலை சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் மாடு முட்டியதில் சிறுமி ஒருவர் காயமடைந்தார். அந்தச் சிறுமி தற்போது நலமுடன் இருக்கிறார். அவருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு…

மேலும் படிக்க

தலைமை ஆசிரியர்கள் முயற்சியால் அடியோடு மாறிப்போன அரசு பள்ளிகள்..!!

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் அரசுப் பள்ளியை பார்ப்பவர்கள் அதை அரசுப் பள்ளி என்றே கூறமாட்டார்கள். காரணம் தனியார் பள்ளிக்கு நிகராக பள்ளிக் கட்டிடங்கள் ஜொலிக்கின்றன. சுத்தமான கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், விசாலமான விளையாட்டு திடல், ‘ஸ்மார்ட்’ வகுப்பறை, கூட்டரங்கம், பசுமை நிறைந்த மரங்கள், மாணவர்கள் உணவு சாப்பிட தனி இடம் என தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் அளவுக்கு புதுப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அனைத்து வசதி களுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. அரசு…

மேலும் படிக்க

பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம்..!!வயதான தம்பதி கழுத்தை நெரித்து கொலை..!!

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், ஈ.வி.பி.டவுன் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 83), இவரது மனைவி ஜெய்பார்வதி (72), இவர்களது மகன் சக்திவேல் (46). 2 நாட்களுக்கு முன்பு சக்திவேல் தனது பெற்றோர் வீட்டில் இருந்த நிலையில் வீட்டை பூட்டிவிட்டு சென்றவர் இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது பெற்றோர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு, சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி…

மேலும் படிக்க

அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது..!!

ஜம்மு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமர்நாத் குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர். இந்த ஆண்டுக்கான பயணம் ஜூலை 1-ம் தேதி முதல் தொடங்கி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று பகவதி நகர் அடிப்படை முகாமில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் அமர்நாத் பயணிகளின் பாதுகாப்பு கருதி யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதில் 422 பேர் பால்டால் வழியாகவும், 577 பேர் பஹல்காம்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram