6 PACK-ல் ‘சிவகார்த்திகேயன்’!! ~ இணையத்தில் பரவும் #SK21..!!

மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 14 ஆம் தேதி வெளியான படம் ‘மாவீரன்’. இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ள நிலையில், வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படம் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஒடி 80 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக சமீபத்தில் படக்குழு அதிகாரப்பூர்வமாக…

மேலும் படிக்க

மீண்டும் உயர்ந்துள்ள ஆவின் பால் விலை..!! டீ, காஃபி விலை உயரும் அபாயம்..!!

தமிழகத்தை பொருத்தவரை பால் விற்பனையில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. 5 லிட்டர் எடை கொண்ட பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை ரூ.10 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த திடீர் விலையேற்றதால் டீக்கடை மற்றும் உணவகங்களில் டீ மற்றும் காபி போன்றவற்றின் விலை விரைவில் 2 ரூபாய் வரை உயரலாம் எனவும், பிங்க் நிறத்தில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் பால் பாக்கெட்டை…

மேலும் படிக்க

“நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது” ~ பெற்றோர்களிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டம்..!!

ஆளுநர் மாளிகையில் நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக நிகழ்ச்சி ஒன்று இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் கலந்து கொண்ட பெற்றோர் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டு ஆளுநர் ரவியிடம் முன்வைத்தனர். நிகழ்ச்சியின்போது சேலத்தை சேர்ந்த பெற்றோர் ஒருவர் ஆளுநரிடம்  நீட் தேர்வை நீங்கள் எப்போது முழுவதுமாக ஒழிக்க நடவடிக்கை எடுப்பீர்கள் என கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து பதிலளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்ததாவது.. “ நீட் தேர்விற்கு…

மேலும் படிக்க

உலக யானை நாள் ‘ஆக-12’ : தமிழ்நாட்டின் போர்யானைகள்..!!

வேழமுடைத்து மலைநாடு என்றார் ஒளவையார். தமிழ்நாட்டிலுள்ள இரண்டு மலைத்தொடர்களிலும் – மேற்குத்தொடர்ச்சி, கிழக்குத் தொடர்ச்சி – உள்ள காடுகள் பல்லாயிரம் ஆண்டுகளாக யானைகளுக்கு உகந்த வாழிடமாக இருந்தன. இம் மலைகளைப் போர்த்தியிருக்கும் காடுகளில் இன்றும் யானைகள் வாழ்கின்றன. அண்மைக்காலம் வரை சமவெளிக் காடுகளிலும் இருந்தன. வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலிருந்தே இவை நம் காடுகளை உறைவிடமாகக் கொண்டிருந்தன. தூத்துக்குடிக்கு அருகிலுள்ள ஆயனடைப்பு என்கிற இடத்தில் 30,000 ஆண்டு பழமையான யானை தொல்லெச்சம் (fossil) ஒன்று நமக்கு கிடைத்துள்ளது. இமயத்தின்…

மேலும் படிக்க

தொடரும் கொலைகள், பதறும் நெல்லை மக்கள் ~ ஒரே மாதத்தில் 10 உயிர்கள் பறிபோன பரிதாபம்..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 10 பேர் சிறிய காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்திருந்தபோதும், அடுத்தடுத்து பழிவாங்கும் வகையில் கொலைகள் நடைபெற்ற வண்ணம் இருப்பது பொதுமக்களுக்கு அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பழிக்குப்பழியாக நடைபெறும் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சிறிய மோதல் தொடர்பாக ஏற்படும் முன்விரோதம் கடைசியில் கொலையில் முடிகிறது. மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில்…

மேலும் படிக்க

சென்னையில் நடைபெறவிருந்த ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி ரத்து..!!

சென்னை பனையூரில் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இந்த நிலையில், தற்போது நிகழ்ச்சியானது ரத்து செய்யப்பட்டு உள்ளது. மழை காரணமாக இசை நிகழ்ச்சி நடைபெற இருந்த மைதானத்தில் நீர் தேங்கியதால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, வேறொரு நாளில் இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். NEWS EDITOR : RP

மேலும் படிக்க

அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும்..!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “நமது சமுதாயத்தில் மிகவும் போற்றிப் பாதுகாக்கக் கூடிய குழந்தைகளின் நலனை உறுதி செய்வதில் அங்கன்வாடி மையங்கள் மற்றும் குழந்தைகள் நல சேவைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை அனைவரும் அறிவீர்கள். இந்த…

மேலும் படிக்க

காஷ்மீரில் 400 அடி நீளமுள்ள தேசிய கொடியுடன் பேரணி..!!

75-வது ஆண்டு சுதந்திரதின நிறைவு விழாவையொட்டி கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் வீடுகள்தோறும் அனைவரும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் வீடுகளில் ஏற்றப்பட்ட தேசிய கொடியுடன் ‘செல்பி’ எடுத்து மத்திய அரசின் பிரத்யேக இணையதளத்தில் பதிவேற்ற பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில் மக்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றுவதை ஊக்குவிக்கும் விதமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேசிய கொடி பேரணி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று காஷ்மீரின்…

மேலும் படிக்க

ஒரு நாள் வீட்டுக்கு வராததால் கோபம்; மகளை வெட்டிக்கொலை செய்த கொடூர தந்தை- கைது செய்து போலீஸ் விசாரணை..!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள முச்சல் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பாவ். கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 20 வயதில் மகள் ஒருவர் இருந்தார்.இந்த நிலையில் அவரது மகள் கடந்த புதன்கிழமை யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வியாழக்கிழமை வீட்டுக்கு திரும்பி வந்தார்.அப்போது, யாரிடமும் சொல்லாமல் எங்கு சென்றாய்? ஒரு நாள் முழுவதும் வீட்டுக்கு வராதது ஏன்? என கேட்டு பாவ் தனது மகளுடன் சண்டையிட்டார். ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற…

மேலும் படிக்க

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு..!!

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.44,000-க்கும் ஒரு கிராம் ரூ.15 உயர்ந்து ரூ.5,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. NEWS EDITOR : RP

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram