இமாசல பிரதேசத்தில் மேக வெடிப்பு..!! வெளுத்து வாங்கிய மழை..!!

இமாசல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால், மழை கொட்டி தீர்த்தது. சிறிது நேரத்தில் மாம்லை கிராமத்தில் வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மழை வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர். வெள்ளத்தில் சிக்கி தவித்த 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேகவெடிப்பு சம்பவத்தால் 7 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு வேதனை தெரிவித்துள்ள இமாசல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுக்கு, தனது டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது. மேக வெடிப்பால் 7 பேர் உயிரிழந்துள்ள…

மேலும் படிக்க

நாங்குநேரி மாணவருக்கு அறுவை சிகிச்சை : ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து நிபுணர்கள் குழு நெல்லை வருகை..!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகிய 2 பேரும், சக பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டனர். இதில் படுகாயமடைந்த 2 பேருக்கும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர்களும் நேரடியாக மருத்துவமனைக்கு வந்து மாணவருக்கு ஆறுதல் தெரிவித்து உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளனர். அதன்பின்னர்…

மேலும் படிக்க

நீட் தேர்வில் தொடர் தோல்வி..!! குரோம்பேட்டை மாணவர் தற்கொலை..!!

சென்னையை அடுத்த குரோம்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் செல்வம். போட்டோகிராபரான இவருடைய மகன் ஜெகதீஸ்வரன் (வயது 19). சி.பி.எஸ்.இ. பிரிவில் பிளஸ்-2 படித்த ஜெகதீஸ்வரன், 424 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். மருத்துவ படிப்பில் அதிக ஆர்வம் இருந்ததால் 2 வருடமாக நீட் தேர்வு எழுதினார். ஆனால் தொடர்ந்து 2 முறையும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. எனினும் மீண்டும் 3-வது முறையாக நீட் தேர்வு எழுதி அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்குவேன் என தந்தையிடம்…

மேலும் படிக்க

சென்னையில் விமான சேவை பாதிப்பு

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி, நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை சென்னையில் விடிய விடிய இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. கனமழையால் பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது….

மேலும் படிக்க

திருப்பதி மலைப்பாதையில் சிறுமியை தாக்கிய சிறுத்தை

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் நடந்து செல்லும் அலிபிரி அடர்ந்த வனப்பகுதி என்பதால் வனவிலங்குகள் அடிக்கடி நடைபாதைக்கு வருகின்றனர். ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், போத்தி ரெட்டி பாலத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார். அவரது மனைவி சசிகலா. மகள் லக்ஷிதா (வயது 6). நேற்று முன்தினம் திருப்பதி வந்தனர். இரவு 7.30 மணி அளவில் தினேஷ் குமார் மனைவி,…

மேலும் படிக்க

சென்னை-இந்தோனேசியா இடையே தினசரி விமான

இந்தோனேசியா நாட்டுக்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவை இல்லை. தமிழகத்தில் இருந்து இந்தோனேசியா செல்ல வேண்டிய பயணிகள் டெல்லிக்கு சென்று அங்கிருந்தும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சென்று அங்கிருந்தும் இணைப்பு விமானங்கள் மூலமாக செல்ல வேண்டும். இந்த நிலையில் இந்தோனேசியாவில் உள்ள மேடான் நகரில் குவாளா நாமு விமான நிலையத்துக்கும், சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கும் இடையே தினசரி நேரடி விமான போக்குவரத்து சேவை தொடங்கியது. இந்தோனேசியா மக்கள் தமிழ்நாட்டுக்கு பெருமளவு…

மேலும் படிக்க

நாங்குநேரி சம்பவத்தை நேரில் பார்த்ததால் மாரடைப்பால் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி..!! “ரூ.3 லட்சம்” நிவாரணம் அறிவித்து ‘முதலமைச்சர் ஸ்டாலின்’ உத்தரவு..!!

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம் மற்றும் கிராமத்தைச் சேர்ந்தஅம்பிகா என்பவரது மகன் சின்னத்துரை மற்றும் மகள் சந்திரா செல்வி ஆகிய இருவரையும் கடந்த 9-8-2023 அன்று அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த அவர்களது உறவினர் கிருஷ்ணன், த/பெ.சுடலைமுத்து (வயது 59) என்பவர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்த கிருஷ்ணனின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு…

மேலும் படிக்க

துப்புரவு ~ பிளாஸ்டிக் ஒழிப்பு பணி..!!

ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) கலைவாணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழ்வாணன், முருகன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் லதா சக்திவேல், ஊராட்சி செயலர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.திருமருகல் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்”என்னுடைய தாய் மண்-எனது தேசம்” திட்டத்தின் ஒட்டுமொத்த துப்புரவு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு பணிகள் நடந்தது. இந்த பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர் நேரில்…

மேலும் படிக்க

நிதி நிறுவனம் நடத்தி ரூ.8 கோடி மோசடி..!!

நாகையில், நிதி நிறுவனம் நடத்தி ரூ.8 கோடி மோசடி செய்த நிறுவன தலைவர், இயக்குனர்கள் 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நிதி நிறுவனம் புதுச்சேரி சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் முகமது அலி. இவர் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கிய பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக நாகையை சேர்ந்த கோவிந்தராஜ், ஆறுமுகம், தமிழ்வாணன், காரைக்காலை சேர்ந்த பழனிவேல், ராஜமூர்த்தி, கலியபெருமாள், கனகராஜ், பிரபாகரன் ஆகிய 8 பேர் செயல்பட்டு வந்தனர். இந்த…

மேலும் படிக்க

சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் அடைக்கப்படும்..!!

வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் வெங்கட்ட லெட்சுமணன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வேதாரண்யம் நகராட்சி பகுதியில் ஆடு, மாடுகளை வீட்டில் கட்டிப்போட்டு வளர்க்க வேண்டும். மீறி நகர் பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து உடனடியாக கோசாலையில் அடைக்கப்படும். உரிமையாளர்கள் மாடுகளை அபாரதம் செலுத்தி மீட்க வேண்டும். நகராட்சி கடைவீதிகளில் மாடுகளை திரியவிட கூடாது. NEWS EDITOR : RP

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram