கோதண்டராமர் கோவிலில் சமபந்தி விருந்து..!!
ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள கோதண்ட ராமர் கோவில், வீரஆஞ்சநேயர் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலாகும். இக்கோவிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து இன்று நடந்தது. ஆரணி நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி தலைமை தாங்கினார். இதில் உடல் உழைப்பு மேம்பாட்டு குழு உறுப்பினர் எஸ்.எஸ்.அன்பழகன், நகரசபை உறுப்பினர் உஷாராணி மற்றும் கோவில் அறங்காவலர் குழு தலைவர் எம்.பழனி, அறங்காவலர்கள் பரமேஸ்வரன், நவநீதம், சேகர் உள்பட பொதுமக்கள் 1000-க்கும்…