பிரணவ் ஜுவல்லரி நிறுவனம் தொடர்பான வழக்கில் அந்நிறுவன உரிமையாளரின் மனைவி கார்த்திகா திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்..!!

திருச்சியை தலைமையிடமாக கொண்டு மதுரை, கும்பகோணம், சென்னை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரணவ் ஜுவல்லரி இயங்கி வந்தது. இதன் இயக்குநர்களாக திருச்சியை சேர்ந்த மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா இருந்து வந்தனர்.குறிப்பாக, ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 2 சதவீதம் வட்டி வழங்கப்படும் எனவும் அப்படியில்லை என்றால் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 106 கிராம் தங்க நகைகளை 10 மாதங்கள் கழித்துப் பெறலாம் என்றும் கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டனர். இது மட்டுமின்றி 11…

மேலும் படிக்க

துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வந்த ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது..!!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பன்னாட்டு விமான நிலைய வருகை பகுதியில் இருந்து புறப்பாடு பகுதிக்கு செல்லக்கூடிய இடத்தில் கழிவறை ஒன்று உள்ளது.இங்கு விமான நிலைய தனியார் நிறுவன ஊழியரான மணிவண்ணன் என்பவர் சென்று விட்டு நீண்ட நேரத்திற்கு பின் வெளியே வருவதை கவனித்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை போலீசார் அவரை மடக்கி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்து அவரது சோதனை செய்ததில், அவரது உள்ளாடைக்குள் 8 பாக்கெட்டுகளில் சுமார் ரூ.1 கோடியே…

மேலும் படிக்க

திருப்பத்தூர் : கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவான உறவினர் கைது..!!

பனந்தோப்பு அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்த ஜீவிதா பர்கூர் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவரை உறவினரான சின்ன கசிநாயக்கன் பட்டியை சேர்ந்த சரண்ராஜ் ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஜீவிதா, சரண்ராஜ் இடம் கடந்த சில மாதங்களாக பேசாத காரணத்தால் ஆத்திரமடைந்த அவர், ஜீவிதாவின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் ஜீவிதாவின் உடலை மீட்டு திருப்பத்தூர்…

மேலும் படிக்க

சென்னை : வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்க நகைகளை கொள்ளை..!!

சென்னை ஓட்டேரியை சேர்ந்தவர் 68 வயதான முதியவர் ரபுதீன்.  இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அபிதாபியில் வேலை செய்து வந்தார். அதன் பிறகு அவரது மனைவியுடன் ஓட்டேரியில் வசித்து வருகிறார்.  இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.  இரண்டு மகன்களும் ஜெர்மனியிலும்,  மகள் சவுதியிலும் வசித்து வருகின்றனர். கணவன்- மனைவி இருவரும் ஓட்டேரி மற்றும் அவர்களுக்கு சொந்தமான பெரம்பூர் ஜமாலியா ரோடு பகுதியில் உள்ள மற்றொரு வீடு என இரண்டு வீட்டிலும் மாறி…

மேலும் படிக்க

கொலை முயற்சியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்..!!

திண்டிவனம் தாலுகா சாரம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 49). இவர் மீது ஒலக்கூர் பகுதியில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கடந்த 20.8.2023 அன்று சாரம் பகுதியில் உள்ள ஓட்டலின் அருகே முன்விரோதம் காரணமாக ஒருவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக பெருமாளை ஒலக்கூர் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, பெருமாள் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவருடைய செயல்களை…

மேலும் படிக்க

மணிப்பூரில் மெய்தி இனத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் கொலை..!!

மணிப்பூரில் 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில போலீசாருடன் ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பதற்றம் நிறைந்த பகுதிகளில் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். புகைபடங்கள் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், புகைபடங்களில் பிணமாக கிடந்த இருவரும் மெய்தி இனத்தைச் சேர்ந்த 17,19 வயது மாணவர்கள் எனவும் கடந்த ஜூலை மாதம்…

மேலும் படிக்க

சீர்காழி அருகே  வீட்டில் பூட்டை உடைத்து 7 சவரன் தங்க நகை மற்றும் 55 ஆயிரத்தை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை..!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் கம்பன் நகரில் வசித்துவருபவர் சோமசுந்தரம். டால்மியா சிமெண்ட் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவரான இவர் 13ஆம் தேதி சென்னையில் வசிக்கும் மகன் வீட்டிற்குகுடும்பத்துடன் சென்றுள்ளார். கடந்த ஒரு வார காலமாக வீடு பூட்டி இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 7 சவரன் தங்க நகை மற்றும் 55 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.இதனையடுத்து வீடு திரும்பிய சோமசுந்தரம் வீட்டின் உள்புற கதவுகள் உடைந்திருப்பதை கண்டு…

மேலும் படிக்க

மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்..!!

அம்பத்தூரில் கல்யாணபுரத்தை சேர்ந்தவர் சாரம்மாள் (25). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி 2 மகன்கள் இருந்துள்ளனர்.இந்நிலையில் இவர் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து அம்பத்தூரை சேர்ந்த ஜான்சன் என்பவரை 2 -வதாக திருமணம் செய்துள்ளார். சிறிது நாட்கள் சென்ற பின்னர் தான் தாம் ஏமாற்றி திருமணம் செய்யப்பட்டுள்ளதை அவர் அறிந்துள்ளார். இதனால் சாரம்மாளை விட்டுவிட்டு அவருக்கு தெரியாமல் ஆவடியில் தனியே வீடு எடுத்து தங்கியுள்ளார்.ஜான்சன் ஆவடியில் தங்கி இருப்பதை சாரம்மாள் எப்படியோ தெரிந்து கொண்டார். இந்நிலையில்…

மேலும் படிக்க

கொலாபாவில் ரூ.1.41 கோடி போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்..!!

தென்மும்பை கொலாபா பகுதியில் நேற்று போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் சந்தேகம் படும்படி நடமாடியதை கண்ட போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் பதுக்கி வைத்திருந்த மெபட்ரோன் என்ற போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து 2 பேரையும் கைது செய்து விசாரித்தனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த கொலாபாவில் பதுங்கி இருந்த ஒருவரும், டோங்கிரியில் பதுங்கி இருந்த மற்றொருவரையும் போலீசார் பிடித்து கைது செய்தனர். பிடிபட்ட 4 பேரிடம் இருந்து…

மேலும் படிக்க

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை-பணத்தை திருடிச்சென்று விட்டனர் : வேலூர்..!!

குடியாத்தம் அடுத்த கல்மடுகு கிராமம் அண்ணாதெருவை சேர்ந்தவர் சந்தியா (வயது 30). இவரது கணவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனை தொடர்ந்து சந்தியா தனது இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தியாவின் தாயார் இறந்து விட்டார். இதனால் தினமும் மாலையில் வீட்டை பூட்டிக்கொண்டு அதே கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று தந்தை வெங்கடேசனுக்கு சமையல் செய்துவிட்டு அங்கேயே தங்கிவிட்டு காலையில் வீடு திரும்புவது வழக்கம். அதன்படி பெற்றோர்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram