வெளிநாட்டு மருத்துவர்கள் இந்தியாவில் சேவை..!!

இந்தியாவிலும்,  வெளிநாடுகளிலும் மருத்துவம் பயிலும் இந்தியர்கள்,  பல்வேறு மாநிலங்களில் மருத்துவ சேவையாற்ற சம்பந்தப்பட்ட மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்வது கட்டாயம்.  இதற்கான வழிகாட்டுதல்களையும்,  விதிமுறைகளையும் தேசிய மருத்துவ ஆணையம் வகுத்துள்ளது.  இந்தியாவில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் உள்ளனர்.இதனைத் தொடர்ந்து வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு வந்து மருத்துவம் பயிலவும்,  மருத்துவ சேவையாற்றவும் தற்காலிக பதிவு நடைமுறையையும் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) கொண்டு வந்துள்ளது.   அதன்படி வெளிநாட்டு மருத்துவர்கள், இந்தியாவில் மருத்துவம் பயிலவும், மருத்துவ…

மேலும் படிக்க

கொடிய நிபா வைரஸுக்கு,  பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகள் முதன்முதலில் தடுப்பூசி சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்..!!

இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இந்த நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், சமீபத்தில் கேரளாவில் கடந்த ஆண்டு செப்டம்பரில் பரவியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். நிபா வைரஸ் வெளவால்களால் பரவுகிறது.  பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் (பன்றிகள் போன்றவை) அல்லது நெருங்கிய தொடர்பு மூலம் ஒருவரிடமிருந்து நபருக்கு பரவக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.  அவசர ஆராய்ச்சி தேவைப்படும் நோயாக உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த வைரஸ்,  தட்டம்மை போன்ற நன்கு அறியப்பட்ட நோய்க்கிருமிகளான பாராமிக்சோவைரஸின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தது என்று அவர்கள்…

மேலும் படிக்க

சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு..!!

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்தது.  குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது.  அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கும் இந்த உருமாறிய வைரஸ் தொற்றான ஜேஎன் 1 வைரஸே காரணம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில்,  சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த 42 வயதான நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலனின்றி இன்று உயிரிழந்தார்.  இவர் கடந்த 31ம் தேதி அன்று கொரோனா…

மேலும் படிக்க

இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பிரவீண் பவார் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்..!!

செவிலியர் – மக்கள்தொகை விகிதம் 1:476 ஆக உள்ளது.  தேசிய மருத்துவ ஆணையத்தின் தகவல்படி 2022 ஜூன் நிலவரப்படி 13,08,009 ஆங்கில முறை மருத்துவர்கள் மாநில மருத்துவ கவுன்சில் மற்றும் தேசிய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர்.மேலும் 5.65 லட்சம் ஆயுஷ் மருத்துவர்கள் உள்ளனர். அந்த வகையில், நாட்டில் மருத்துவர்கள்- மக்கள்தொகை விகிதம் 1: 834 ஆக உள்ளது.  மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இதனால் நாட்டில் மருத்துவம் பயில்வோரின் எண்ணிக்கையும்…

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் பருவ காலத் தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது..!!

 டெங்கு காய்ச்சலுடன், பருவ காலத்தில் பரவும் இன்ஃப்ளூயன்ஸா தொற்றும் தீவிரமடைந்து வருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுமாறு பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.  அதேபோன்று, பருவ கால தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் நோயின் தீவிரத்தைப் பொருத்து நோயாளிகளை வகைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அவை நேரடியாக நுரையீரலைப் பாதிக்கக் கூடியது. இருமல், தொண்டை அலர்ஜி, காய்ச்சல், உடல்…

மேலும் படிக்க

உத்தரப்பிரதேசத்தில் டெங்கு பாதிப்பு 1,700-ஐ தாண்டியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது..!!

லக்னோவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 37 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளன. ஐஷ்பாக்,  அலிகஞ்ச்,  சந்திரா நகர்,  கோசைங்கஞ்ச்,  இந்திரா நகர்,  சின்ஹாட்,  ககோரி, என்கே சாலை,  செஞ்சிலுவைச் சங்கம்,  சில்வர் ஜூபிலி மற்றும் துரியாகஞ்ச் பகுதிகளின் சமூக சுகாதார மையங்களிலிருந்து வழக்குகள் பதிவாகியுள்ளன. டெங்கு பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் மனோஜ் அகர்வால் தெரிவித்தார். அவர்களை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.  டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த மாவட்டத்தின் பல்வேறு…

மேலும் படிக்க

கொட்டும் மழையில் நகராட்சி தூய்மைப் பணியாளர் ஒருவர் உரிய கவச உடையின்றி தூய்மை பணியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..!!

தமிழ்நாட்டில் ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சியில் பருவ மழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்கள் தூர்வாருதல் மற்றும் சாலையோரங்களில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அப்போது இங்குள்ள 4வது வார்டு பகுதியில் கொட்டும் மழையில் தூய்மை பணியாளர் ஒருவர் போதிய கவச உடைகளின்றி குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.இதுகுறித்து ரெயின்கோட் இல்லாமல் தூய்மை பணி செய்து வருவதை ஒருவர்…

மேலும் படிக்க

டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இடத்தை வைத்திருந்தால் ரூ.500 அபராதம்..!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு மருத்துவ குழுவினர் சென்று, மேலும் யாருக்காவது பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்கின்றனர். டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இடத்தை வைத்திருந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் செயல்படும் பொதுமக்கள், நிறுவனங்கள், கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல்முறை நோட்டீஸ் வழங்கப்படும் என்றும், அதனை ஓரிரு நாட்களில்…

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் அகில உலக மருத்துவ மாநாடு நடைபெற இருப்பதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்..!!

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் டைம்ஸ் ஆப் இந்தியாசார்பில் டைம்ஸ் ஹெல்த் கேர் அச்சுவர் விருது வழங்கும் நிகழ்ச்சிநடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பாக செயலாற்றிய மருத்துவமனைகளுக்கும், மருத்துவர்களுக்கும் விருதினை வழங்கினார். உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. தேசிய தர நிர்ணய ஆணையத்தால் 2013 முதல் தற்போது வரை 488 விருதுகள் தமிழக அரசு பெற்றுள்ளது. அரசு ஓமந்தூரார்…

மேலும் படிக்க

பெண்களுக்கு வேண்டிய முக்கியமான ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்தின் முக்கிய பங்கு மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை வளர்ப்பதன் முக்கியத்தும் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1-7 ஆம் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வாரம் கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கு வேண்டிய அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஊட்டச்சத்து மிக முக்கியமானது. அனைத்து வயதினருக்கும் ஊட்டச்சத்து அவசியம் தேவை என்றாலும் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் பெண்களின் ஆரோக்கியத்தில்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram