பொங்கல் பண்டிகை வேட்டி, சேலை திட்டத்திற்கு முன்பணம் ரூ.200 கோடி ஒதுக்கீடு..!!
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், எதிர்வரும் பொங்கல் (2024)ஆண்டு வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்காக 1,68,00,000 எண்ணிக்கையிலான சேலைகள் மற்றும் 1,63,00,000 வேட்டிகளை உத்தேச உற்பத்தி திட்ட இலக்காக நிர்ணயம் செய்து வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு வேட்டி, சேலையினை விநியோகிக்கும் நடைமுறையை முடிவு செய்ய ஏதுவாக, கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய்த் துறை தலைமையில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர், வருவாய்த் துறை மற்றும் கைத்தறி ஆணையர் ஆகியோர் அடங்கிய…