திருவண்ணாமலைக்கு 3 சிறப்பு ரெயில்கள் இயக்கம்

திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கன்டோன்மென்ட் வரை தினசரி இயக்கப்படும் மெமு ரெயில், திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படுகிறது. வேலூர் கன்டோன்மென்ட் நிலையத்தில் இருந்து 1-ந் தேதி இரவு 9.50 மணிக்கு இந்த ரெயில் புறப்பட்டு கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி சாலை, போளூர், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை நள்ளிரவு 12.05 மணிக்கு அடைகிறது. பின்னர் 2-ந் தேதி…

மேலும் படிக்க

மராட்டியத்தில் வேன் மீது லாரி மோதல்

மராட்டிய மாநிலம் யவத்மாலில் உள்ள நாக்பூர்-துல்ஜாபூர் நெடுஞ்சாலையில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த லாரியை சோதனை செய்தனர். சோதனை செய்து கொண்டிருக்கும்போது திடீரென எதிரே வந்த மற்றொரு லாரி போலீஸ் வேன் மீது மோதியது. இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே போலீஸ் அதிகாரி மற்றும் விபத்தை ஏற்படுத்திய லாரியின் டிரைவர் உயிரிழந்தனர். மேலும் இரண்டு போலீஸ் அதிகாரிகள் பலத்த காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த…

மேலும் படிக்க

பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு முகாம்..!!

வேலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் முதற்கட்டமாக 418 ரேஷன்கடைகளுக்கு கடந்த 24-ந் தேதி முதல் அனைத்து தாலுகாக்களிலும் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட முகாம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 2-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் குடும்ப அட்டை எண்ணிக்கையின் அடிப்படையில் அப்பகுதி மக்களுக்கு, விண்ணப்பம் பதிவு செய்யும் நாள், நேரம் மற்றும் முகாம் நடைபெறும் ஆகிய விவரங்கள் அடங்கிய டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. டோக்கன்களில் தெரிவிக்கப்பட்ட…

மேலும் படிக்க

மகளிர் உரிமைத் தொகை பெற சென்னையில் இதுவரை 2 லட்சம் பேர் பதிவு : மா.சுப்பிரமணியன் தகவல்..!!

மகளிர் உரிமைத் தொகை பெற சென்னையில் இதுவரை 2 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை, சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், மதுரவாயல் சட்டமன்ற தொகுதிகளில், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவிக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் 3 கட்டங்களாக நடைபெற…

மேலும் படிக்க

தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு: கோயம்பேடு சந்தையில் கிலோவுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.140-க்கு விற்பனை..!!

தமிழகத்தில் தக்காளி விலை மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னை – கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளி விலை கிலோவுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.140-க்கு விற்கப்படுகிறது. தமிழகத்தின் தக்காளி தேவையை ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களே பெரும்பாலும் பூர்த்தி செய்து வருகின்றன. அதனால், தமிழகம் அந்த மாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய சூழல் உள்ளது. தற்போது விளைச்சல் குறைவால் நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. தமிழகத்திலும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் கிலோ ரூ.140 வரை…

மேலும் படிக்க

பயன்பாடின்றி முடங்கிய காஞ்சி அண்ணா டிஜிட்டல் நூலகம்..!!

மதுரையில் கலைஞர் பெயரில் பிரம்மாண்ட நூலகம் திறந்த தமிழக அரசுக்கு காஞ்சிபுரத்தில் அண்ணா பெயரில் உள்ள டிஜிட்டல் கிளை நூலகம் செயல்பாடு இல்லாமல் முடங்கிக் கிடப்பது தெரியுமா என கேள்வி எழுப்புகின்றனர் வாசிப்பாளர்கள். இந்த நூலகம் செயல்படாததால் போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் பலர் சிரமத்தை சந்திக்கின்றனர். காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே உள்ள விளக்கொளி பெருமாள் கோயில் தெருவில் அண்ணா கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கிளை நூலகமானது மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய நூலகத்தில்…

மேலும் படிக்க

கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை 11.20 மணிக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்மநபர், “கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள நடைமேடை 1-ல் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. சரியாக 11 மணிக்கு அது வெடிக்கும்” என மிரட்டல் விடுத்துவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். ஆனால் 11 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என 11.20 மணிக்கு மர்மநபர் தகவல் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், இது புரளியாக இருக்கலாம் என கருதினர்….

மேலும் படிக்க

பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு..!!

பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் பெற, மறு கூட்டலுக்கு மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சம்மந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள், உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். ராணிப்பேட்டை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தினர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. NEWS EDITOR : RP

மேலும் படிக்க

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீதர் காலனியில் உள்ள பொன்முடியின் வீட்டிற்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். விழுப்புரத்தில் உள்ள பொன்முடியின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மத்திய பாதுகாப்பு படையுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, விழுப்புரம் என அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான ஒன்பது இடங்களில் அமலாக்கத்தூறை சோதனை மேற்கொண்டு வருவதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கடந்த மாதம் 13…

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு பயணிகள் அவதி

சென்னையில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் மெட்ரோ ரெயில் மூலம் அலுவலகம், கல்லூரிகளுக்கு போக்குவரத்து நெரிசலின்றி சென்று வருகின்றனர். இந்நிலையில், சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் பணிமனை வரையிலான நீல நிற வழித்தடத்தில் மெட்ரோ சேவை இன்று காலை முதல் பாதிக்கப்பட்டுள்ளது. விம்கோ நகர் – விம்கோ நகர் பணிமனைக்கு செல்லும் தடத்தில் மின் விநியோகத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனைசுங்கச்சாவடி மெட்ரோ முதல் விம்கோ நகர்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram