மாணவனை பிரம்பால் அடித்ததால் ஆத்திரம் ~ ஆசிரியரை பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு..!!

கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜகண்டிகை அரசினர் உயர் நிலைப் பள்ளி உள்ளது. நேற்று முன்தினம் இங்கு 6-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனை அந்த பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை செய்து வரும் மோகன் (வயது 36) பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவனுக்கு கை மற்றும் கால்கள் வீங்கியது. ஆனால் மாணவனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பாமல் பள்ளியில் வைத்து வீக்கத்திற்கு ஆசிரியர்கள் ஜஸ் ஒத்தடம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் நடந்த சம்பவம் குறித்து வீட்டில் யாருக்கும் சொல்ல வேண்டாம்…

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான சீருடை, காலணிகள் உள்ளிட்டவை உடனடியாக வழங்க வேண்டும் ~ அண்ணாமலை..!!

பள்ளிகள் திறந்து ஒரு மாதம் கடந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய புத்தகப் பை மற்றும் காலணிகள் இன்னும் வழங்கப்படவில்லை என்றும், மாணவர்களுக்கான சீருடை ஒன்று மட்டுமே வழங்கியிருப்பதால், தினமும் சீருடை அணிய முடியாமல் மாணவர்கள் பள்ளிக்கு வரும் நிலையில் இருப்பதாகவும் இன்றைய நாளிதழில் செய்திகள் வந்துள்ளன. மேலும், ஒரு சில பள்ளிகளில் வழங்கப்பட்ட காலணிகள், மாணவர்களுக்குப் பொருந்தும் அளவிலும் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின்…

மேலும் படிக்க

தமிழக இளைஞர்களை உலகளவில் முதன்மையானவர்களாக மாற்றுவதே எனது லட்சியம் : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, நான் முதல்வன் திட்டம் எனது கனவு திட்டம். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வளர்ந்த பின்னர் தமிழ்நாட்டின் அனைத்து துறைகளும் வளர்ந்து வருகிறது. அனைத்து தரப்பினரும் வளர்ந்து வருகிறார்கள். மாணவர்கள், இளைஞர்களிடையே பெரிய மாற்றத்தை ஏற்படுத்த இந்த திட்டம் காரணமாக உள்ளது. நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் கருணாநிதி. நான் முதல்வன் திட்டம் இளைஞர்களிடம் மாற்றத்தை…

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும் ~ வானிலை ஆய்வு மையம்..!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (07.08.2023) முதல் (13.08.2023) வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். (07.08.2023 மற்றும் 08.08.2023) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக…

மேலும் படிக்க

செந்தில் பாலாஜி கைதுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி..!!

சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் மாதம் கைது செய்தது. தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் செந்தில் பாலாஜியின் கைது சட்ட விரோதம் எனக் கூறி சுப்ரீம் கோர்ட்டில் அவரது மனைவி தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தது சட்டவிரோதம் இல்லை. இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடையில்லை என்றும், கைது செய்த பிறகு ஆட்கொணர்வு மனு தாக்கல்…

மேலும் படிக்க

மதுரையில் 116 உணவகங்களுக்கு நோட்டீஸ் ~ உணவுப் பாதுகாப்புத்துறை தகவல்..!!

மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 20,000-க்கும் மேற்பட்ட உணவகங்கள்செயல்படுகின்றன. இதில் சில உணவகங்களில் தரமற்ற உணவுகளை விற்பனை செய்வது, கெட்டுப்போன உணவுகளை விற்பனை செய்வது, கலப்படம் செய்வது தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், உணவகம் மட்டுமின்றி பேக்கரி, டீக்கடைகள், பலகாரக் கடைகளிலும் கலப்படம், சுகாதாரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மதுரை நகர் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இயங்கி வரும், உணவகங்களில்திடீர் சோதனையில் கடந்த ஜூன் மாதத்தில், 658 உணவகங்களில் ஆய்வு செய்தனர்.உணவு பாதுகாப்புத்துறையின்…

மேலும் படிக்க

ரேஷன் கடைகளில் இன்று முதல் கிலோ ரூ.60-க்கு தக்காளி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி, தக்காளி விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் கூட்டுறவுத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்டை மாநிலங்களில் பெய்த கனமழையினால் தக்காளி விளைச்சல் குறைந்ததால், தக்காளியின் வரத்து குறைந்து காணப்படுகிறது. இதனால் மீண்டும் வெளிச்சந்தையில் தக்காளின் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் பாதிப்படையாமல் தடுக்கும் வகையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் தக்காளி விற்பனை 302 ரேஷன் கடைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 1-ந்தேதி (இன்று) முதல் தக்காளி விற்பனையை 500 ரேஷன்…

மேலும் படிக்க

தக்காளி விலை மீண்டும் உயர்வு கிலோ ரூ. 180 -க்கு விற்பனை

தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. 2 வாரங்களுக்கு முன் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டில் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், கடந்த வாரம் ஓரளவு விலை குறைந்தது. அதன்படி, கடந்த 24-ந்தேதி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. தக்காளி விலை மீண்டும் உயர தொடங்கியது. கோயம்பேடு சந்தையில் நேற்று ஒரு…

மேலும் படிக்க

திருச்சியில் ரெயில்கள் புறப்பட தாமதம்

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ஒவ்வொரு ரெயிலாக அனுமதிக்கப்படுகிறது. இதனால், ரெயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் அவதி அடைந்துள்ளனர். பாண்டியன், நெல்லை, பொதிகை உள்ளிட்ட விரைவு ரெயில்கள் இன்று 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, விழுப்புரம், கரூர் முன்பதிவு இல்லாத ரெயில்கள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து வேளாங்கன்னி உள்ளிட்ட இடங்களுக்கு முன்பதிவு…

மேலும் படிக்க

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் பெறலாம்

பிளஸ் 2 மாணவர்கள், தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று (ஜூலை 31) முதல் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதிய மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று (ஜூலை 31-ம் தேதி) முதல் வழங்கப்படவுள்ளன. மாணவா்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாகவும், தனித் தோ்வா்கள் தாங்கள்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram