பொங்கலுக்கு நாளை வெளியாகும் 4 திரைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் எப்போதும் பண்டிகை தினங்களான தீபாவளி,  பொங்கலுக்கு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம்.  அப்படங்கள் குடும்பங்களுடன் கொண்டாடப்படுவது வழக்கம்.  அந்த வகையில் இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு நான்கு படங்கள் வெளியாக உள்ளன.  திரையரங்குகளில் வெளியாகவுள்ள படங்களை இங்கு காண்போம்.பொங்கல் பண்டிக்கையை முன்னிட்டு கேப்டன் மில்லர்,  அயலான்,  மிஷன் சேப்டர்-1, மெரி கிறிஸ்துமஸ் ஆகிய திரைப்படங்கள் நாளை திரையரங்குகளில் வெளிவரவுள்ளன.

மேலும் படிக்க

‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படமும், ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படமும் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகிறது..!!

அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன்,  சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார்.  இத்திரைப்படத்தை நீலம் புரோடக்‌ஷன்ஸ் சார்பில் பா.ரஞ்சித் தயாரித்துள்ளார்.  கீர்த்தி பாண்டியன்,  பிருத்விராஜ், பகவதி பெருமாள்,  இளங்கோ குமாரவேல்,  லிசி அந்தோணி,  திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில்,  கோகுல் இயக்கத்தில் நகைச்சுவை பாணியில் உருவாகியுள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படமும் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகிறது. சத்யராஜ்,  தலைவாசல் விஜய் உட்பட பலர் இத்திரைப்படத்தில்…

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது..!!

பொங்கல் பரிசுத் தொகுப்பு வரும் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை விநியோகம் செய்யப்படவுள்ளது. இதற்கான டோக்கன் விநியோகம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி ஜனவரி 9-ம் தேதி வரை டோக்கன் வழங்கப்படுகிறது.டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்கு ரேஷன் கடைக்குச் சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். அதேபோல், 13-ம் தேதிக்குள் பரிசு தொகுப்பை பெற முடியாதவர்கள், 14-ம் தேதியும் பரிசத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜன.1-ம் தேதி, பொங்கல் தொகுப்பில் தலா ஒரு கிலோ அரிசி,…

மேலும் படிக்க

சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு..!!

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்தது.  குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது.  அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கும் இந்த உருமாறிய வைரஸ் தொற்றான ஜேஎன் 1 வைரஸே காரணம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில்,  சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த 42 வயதான நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலனின்றி இன்று உயிரிழந்தார்.  இவர் கடந்த 31ம் தேதி அன்று கொரோனா…

மேலும் படிக்க

ரூ.6,000 நிவாரணத் தொகை..!! தமிழக அரசின் விதிமுறைகள் விவரம்..!!

வெள்ளம் சூழ்ந்து துணிமணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்களை இழந்த குடும்பங்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலமாக டோக்கன் வழங்கும் முறையை பின்பற்றி ரூ.6,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ‘தமிழகத்தில் 2023 டிச.3 மற்றும் டிச.4 ஆகிய தினங்களில் வீசிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் அதிகனமழை பெய்தது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் குறிப்பிட்ட சில வட்டங்களில்…

மேலும் படிக்க

சின்ன வெங்காயத்தின் விலை இன்று ரூ.130..!!

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்தைப் பொறுத்து விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த வாரத்தைவிட இந்த வாரம் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. வரத்து குறைவு காரணமாக இஞ்சி மற்றும் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.குறிப்பாக சின்ன வெங்காயம் தான் பொதுமக்களுக்கு அதிகளவில் அதிர்ச்சி கொடுத்துள்ளது. நேற்று முன்தினம் கோயம்பேடு சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை சதம் அடித்தது. அடுத்தடுத்த நாட்களில் விலை குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம். காரணம்…

மேலும் படிக்க

திருப்பத்தூர் : கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவான உறவினர் கைது..!!

பனந்தோப்பு அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்த ஜீவிதா பர்கூர் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவரை உறவினரான சின்ன கசிநாயக்கன் பட்டியை சேர்ந்த சரண்ராஜ் ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஜீவிதா, சரண்ராஜ் இடம் கடந்த சில மாதங்களாக பேசாத காரணத்தால் ஆத்திரமடைந்த அவர், ஜீவிதாவின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் ஜீவிதாவின் உடலை மீட்டு திருப்பத்தூர்…

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்..!!

மழை நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது….

மேலும் படிக்க

‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்கவுள்ள நிலையில், அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் அபுதாபிக்கு பயணம்..!! 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர், நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கிடையே, ஐரோப்பாவில் பைக் டூர் சென்ற அஜித்குமார் சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். இதுகுறித்த வீடியோக்களும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களும் வைரலாகின.சமீபத்தில் நடைபெற்ற சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சுபாஸ்கரனிடமே பத்திரிகையாளர்கள் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் நிலவரம்…

மேலும் படிக்க

மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்..!!

அம்பத்தூரில் கல்யாணபுரத்தை சேர்ந்தவர் சாரம்மாள் (25). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி 2 மகன்கள் இருந்துள்ளனர்.இந்நிலையில் இவர் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து அம்பத்தூரை சேர்ந்த ஜான்சன் என்பவரை 2 -வதாக திருமணம் செய்துள்ளார். சிறிது நாட்கள் சென்ற பின்னர் தான் தாம் ஏமாற்றி திருமணம் செய்யப்பட்டுள்ளதை அவர் அறிந்துள்ளார். இதனால் சாரம்மாளை விட்டுவிட்டு அவருக்கு தெரியாமல் ஆவடியில் தனியே வீடு எடுத்து தங்கியுள்ளார்.ஜான்சன் ஆவடியில் தங்கி இருப்பதை சாரம்மாள் எப்படியோ தெரிந்து கொண்டார். இந்நிலையில்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram