தமிழகத்தில் 4 இடங்களில் ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ ‘FOOD STREET’- ரூ. 4 கோடியில் அமைக்க திட்டம்
சென்னை: தமிழகத்தில் 4 இடங்களில் ரூ. 4 கோடி செலவில் ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ அமைக்க முடிவு செய்யப்பட்டுள்து. நாடு முழுவதும் 100 ஆரோக்கியமான உணவு வீதிகளை உருவாக்கும் உணவு வீதி திட்டத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயல்படுத்த உள்ளது. உணவு வர்த்தகங்கள் மற்றும் பொதுமக்களிடையே பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களை ஊக்கப்படுத்தி, அதன் வாயிலாக உணவால் ஏற்படும் நோய்களைக் குறைத்து, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இதை செயல்படுத்துவதற்கு சோதனை…