இது ஓட்டுப் போடாதவர்களுக்குமான ஆட்சி – முதல்வர் ஸ்டாலின்

இன்று (மே 7) முதல் 9-ஆம் தேதி வரை திமுக ஆட்சி குறித்த சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. இந்த நிலையில், இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் அண்ணா ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் கூறியது: “விமர்சனங்கள் குறித்து நான் இம்மியளவும் கவலைப்படுவதில்லை. நல்லவற்றை ஏற்றுக் கொள்கிறேன்….

மேலும் படிக்க

ஏவிஎம் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

1945ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஏவிஎம் ஸ்டூடியோஸ் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளது. சமீபகாலமாக திரைப்படத் தயாரிப்பிலிருந்து இந்த நிறுவனம் விலகியுள்ளது. சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவின் ஒரு பகுதி திருமண மண்டபமாகவும், குடியிருப்புகளாகவும் மாற்றப்பட்டுள்ள நிலையில், 3வது அரங்கில் ஆரம்பகால சினிமாவில் பயன்படுத்தப்பட்ட அரிய பொருட்களை கொண்ட ஹெரிடேஜ் அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர்…

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று முதல் ‘THE KERALA STORY’ திரையிடப்படாது – மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் அறிவிப்பு

சுதிப்தோ சென் இயக்கி, விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்த ‘தி கேரளா ஸ்டோரி’ நேற்று வெளியானது. தென் மாநிலத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் “சுமார் 32,000 பெண்களின்” பின்னணியில் உள்ள நிகழ்வுகளை “கண்டுபிடிப்பதாக” இப்படம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தடை செய்ய  உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டது. இந்த நிலையில் கடந்த…

மேலும் படிக்க

மும்பை அணியை வீழ்த்தி CSK அணி அதிரடி வெற்றி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த நிலையில் பேட்டிங்கில் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து அதிர்ச்சியாக ஆட்டமிழந்து வெளியேறினர். மூன்று ஓவர்களின் முடிவிலேயே  மூன்று விக்கெட்களை இழந்துள்ளது.  ரோஹித் சர்மா, இஷாந்த் கிஸன் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.  அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ரன் எதுவும் எடுக்காமலேயே டக் அவுட் ஆனார். இதன் பின்னர் நிதானமாக…

மேலும் படிக்க

4K சினிமா தரத்தில் விலங்குகளை காண்க; வண்டலூர் உயிரியல் பூங்கா வீடியோவை பகிர்ந்த விஜய் சேதுபதி!

வண்டலூர் அறிஞர் அண்ணா வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 180 வகையான 2500க்கும் மேற்பட்ட வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுமக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றாக இருப்பது வண்டலூர் உயிரியல் பூங்கா தான். நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் , வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வரும் விலங்குகளை கண்டு ரசிக்கின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் கோடை…

மேலும் படிக்க

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு | Chance of Heavy Rain in 18 districts of Tamil Nadu

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வடக்கு தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று( 6ம் தேதி ) ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியது. இதன் காரணமாக அப்பகுதிகளில் வரும் 8ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது 9ம் தேதி வாக்கில்…

மேலும் படிக்க

சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் | Traffic change in Chennai tomorrow

சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெகாத்லான் ஸ்போர்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், சென்னை சார்பாக “DECATHLON 10K RUN” ஓட்டம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு நாளை அதிகாலை 3 மணி முதல் காலை 10 மணிவரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதன் விவரம்: அடையார் மார்க்கத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் திரு.வி.க.பாலம், டாக்டர் .டி.ஜி.ஸ்.தினகரன் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, காமராஜர் சாலை மற்றும் உழைப்பாளர்…

மேலும் படிக்க

Governor, Chief Minister குறித்து அவதூறு |  வீடியோக்களை நீக்க யூடியூப்-க்கு சைபர் க்ரைம் பிரிவு பரிந்துரை

சென்னை: ஆளுநர், முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வெளியிடப்பட்ட 386 வீடியோக்களை நீக்க யூடியூப்க்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக தமிழக காவல் துறையின் சைபர் க்ரைம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக சைபர் க்ரைம் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,”சமூக வலைதளங்களில், தமிழக ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலான போலி கணக்குகள், வன்முறையை தூண்டும் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டு தடை செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டில், இதுவரை 40…

மேலும் படிக்க

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் | மதுரையில் கோலாகலம்

மதுரை: கோவிந்தா கோவிந்தா என பக்தர்கள் பரவசத்துடன் முழங்க பச்சைப் பட்டுடுத்தி கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இன்று அதிகாலை 5.52 மணிக்கு இறங்கினார். லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு கள்ளழகரை தரிசனம் செய்தனர். கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 1-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் சுந்தரராஜ பெருமாள் தோளுக்கினியானில் அழகர் எழுந்தருளினார். அழகர்கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சூடிக்கொள்ளவும், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்…

மேலும் படிக்க

வேட்புமனுவில் தவறான தகவல் | இபிஎஸ் மீது வழக்குப் பதிவு

சென்னை: வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்த விவகாரத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சேலம் மத்திய குற்றப்பிரிவு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்டார். அவர், தனது வேட்பு மனு மற்றும் பிரமாணப்பத்திரத்தில் சொத்து விவரம் உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்துள்ளார். எனவே அவர்மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி,…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram