மெட்ரோ ரெயில் வேலைவாய்ப்புகள் பற்றிய பொய்யான அறிவிப்புகளை நம்ப வேண்டாம் – மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை | DON’T BELIVE THE FAKE NEWS ABOUT METRO RAILWAY
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் இருப்பின் அதற்கான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அவைதான் உண்மையான அறிவிப்புகள் என்றும், பிற இணையதளம் மற்றும் வாட்ஸ்அப் (Whatsapp) போன்றவற்றில் அவ்வப்போது வெளிவரும் வேலை வாய்ப்பு அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு பணியாளர்களை தேர்வு செய்யும் பணி, எந்தவொரு தனி மனிதருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வழங்கப்படவில்லை. பணியாளர்கள் தேவையின்போது அதற்கான முன் அறிவிப்பு…