சாலை விதிமீறலா ? – இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது- புதிய நடைமுறைகள் அறிமுகம்

மத்திய அரசின் வழகாட்டுதல்களை பின்பற்றி புதிய நடைமுறைகளை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி மாநிலம் முழுவதும் உள்ள சாலைகளில், போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிக வேகம், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் பயணித்தல், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துதல், சிக்னல்களை மீறிச்செல்லுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லுதல், இதர வாகனங்களை தாறுமாறாக முந்திச் செல்லுதல், ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து, விதிமீறும் வாகனங்கள்…

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமி தனது வேட்பு மனுவின் பிராமண பாத்திரத்தில் அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள் மற்றும் ஆண்டு வருவாய் ஆகியவற்றை குறைத்து பொய்யான தகவல் தெரிவித்ததாக தேனி மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் மிலானி சேலம் நீதிமன்றத்தில் புகார் மனு கொடுத்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி கலைவாணி மனுவில் உண்மை தன்மை இருந்தால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி விசாரணை மேற்கொண்ட குற்றப்பிரிவு…

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும்..! வானிலை மையம் தகவல்

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்ப நிலை வரை உயர வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட வெப்ப நிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். 17 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு திசை மற்றும் வெப்ப சலனம் காரணமாக புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த…

மேலும் படிக்க

கள்ளச்சாராயம் அருந்தி 9 பேர் உயிரிழப்பு – விழுப்புரம் விரைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நேரில் ஆதரவு தெரிவிப்பதற்காக விழுப்புரம் மாவட்டத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்ல உள்ளார். அவர்…

மேலும் படிக்க

சென்னையில் ஆபரண தங்கம் விலையில் மாற்றம் இல்லை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,715-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.45,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.49,472 -க்கு விற்பனையாகிறது. அதேபோல, ஒரு கிராம் வெள்ளி ரூ.78.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.78,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க

அன்னையர் தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து | Mother’s Day: Wishes from Chief Minister MK Stalin

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், உடலுக்குள் இன்னொரு உயிராய் நம்மைச் சுமந்து, உயிருக்கும் மேலாய் அன்பு செலுத்திடும் அன்னையர் அனைவர்க்கும் அன்னையர் தின வாழ்த்துகள்! அன்பினால் அவனியை நிறைக்கும் தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் மதிப்போம், நிறைவேற்றுவோம்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி |

சென்னையில் சாலை அமைப்பதில் தாமதம் செய்த ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சியில் நடைபெறும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தலைமையேற்ற நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, புதிய சாலைகள் அமைக்க ஒப்பந்தம் கோரவும், ஒப்பந்த நிலையிலுள்ள பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார். தண்டையார்பேட்டை, திரு.வி.க., நகர், ஆலந்துார், பெருங்குடி மண்டலங்களில், சாலைகளில் ஐந்து நாட்களுக்கு மேல் பணிகளை துவக்காத ஒப்பந்ததாரர்களுக்கு,…

மேலும் படிக்க

INTERNATIONAL NURSES DAY | உலக செவிலியர் நாள்

குடும்பம் மறந்து, தூக்கம் மறந்து, தன்னை மறந்து, பிறர் நலம் காக்கும் “தேவதைகள் தினம்” செவிலியர்கள் தின நல்வாழ்த்துகள்! உலக செவிலியர் நாள் (International Nurses Day) உலக நாடுகளனைத்திலும் MAY 12 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. செவிலியர்கள் (தாதிகள்) சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை சிறப்பாக நினைவுகூர இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. உலக செவிலியர் அமைப்பு (International Council of Nurses) இந்நாளை 1965அம்  ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது.1953 இல் ஐக்கிய அமெரிக்காவின் அரசு சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியான டொரத்தி சதர்லாண்ட் (Dorothy Sutherland) என்பவர்…

மேலும் படிக்க

குறை பிரசவத்தில் பிறந்த 1.34 கோடி குழந்தைகள்; ஐ.நா. சபை தெரிவித்த அதிர்ச்சி தகவல்!

உலக சுகாதார அமைப்பு, ஐ.நா.குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) மற்றும் தாய்-சேய், குழந்தைகள் சுகாதார கூட்டமைப்பு (பிஎம்என்சிஎச்) ஆகியவை இணைந்து ‘குறை பிரசவ குழந்தைகள்’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வை நடத்தின. இது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “கடந்த 2020-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 9.9% குழந்தைகள் குறை பிரசவத்தில் (37 வாரத்துக்கு முன்பே பிறத்தல்) பிறந்துள்ளன. இது 2010-ம் ஆண்டில் 9.8% ஆக இருந்தது. இந்நிலையில் 2020-ல் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள்…

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, சேலம் மற்றும் திருச்சி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram